சோயா பொடிமாஸ் | Soya Podimas
தேவையான பொருட்கள்:
சோயா உருண்டைகள் - 25வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
கேரட் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணேய் = தேவைக்கு
எலுமிச்சைசாறு - 2 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு+உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை விளக்கம்:
*சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து நீரை ஒட்டப் பிழிந்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
*வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
*கடாயில் என்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களை தாளித்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை வதக்கவும்.
*பின் சோயா மற்றும் கேரட் துறுவலை சேர்த்து நன்கு கிளறி எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கவும்.
பின் குறிப்பு:
*இந்த பொடிமாஸ் சத்து நிறைந்தது.டயட்டில் இல்லாதவர்கள் தேங்காய்த்துறுவலையும் சேர்க்கலாம்.