பருப்பு உருண்டைக் குருமா | Paruppu Urundai Kurma
தேவையான பொருட்கள்:
க்ரேவிக்கு:
வெங்காயம் பெரியது - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் விழுது -1 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லிதூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு+எண்ணெய் - தேவைக்கேற்ப
உருண்டைக்கு:
கடலைப்பருப்பு - 1 கப்
பூண்டு பல் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2கொத்தமல்லி,கறிவேப்பிலை - சிறிது
தாளிக்க:
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 2ஏலக்காய் -1
செய்முறை விளக்கம்:
*பருப்புக்களை 3/4 மணிநேரம் ஊறவைத்து பூண்டு+சோம்புடன் கொரகொரப்பாக அரைக்கவும்.
*இத்துடன் பொடியாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
*வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.
*பின் வெங்காயம், தக்காளி, விழுது வகைகள் மற்றும் தூள் வகைகள் சேர்த்து ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
*நன்கு வதங்கியதும் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*பச்சை வாசனை அடங்கி கொதித்ததும் உருண்டைகளை சேர்த்து கொதிக்கவிடவும்.
*10 நிமிடம் கழித்து கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.
பின் குறிப்பு:
*இதே மாதிரி புளி சேர்த்தும் செய்யலாம்.