சிக்கன் மஞ்சூரியன்(டிரை) | Chicken Manchurian(Dry)

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
ரெட் கலர் - 1 சிட்டிகை
மைதாமாவு - 2 டீஸ்பூன்
முட்டை - 1
சோளமாவு - 4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 3/4 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1 சிறியது
குடமிளகாய் - 1 சிறியது
வெங்காயத்தாள் -4
சோயாசாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை விளக்கம்:

* சிக்கனை சுத்தம் செய்து அதில் உப்பு, மைதாமாவு, சோளமாவு, இஞ்சி பூண்டு விழுது, ரெட் கலர் மற்றும் மிளகாய்த்தூள் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைத்து அவனில் க்ரில் செய்யவும் அல்லது எண்ணெயில் பொரிக்கவும்.

*வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய் மற்றும் வெங்காயத்தாள் அனைத்தையும் பொடியாக அரியவும்.


*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.


*பின் குடமிளகாய் போட்டு லேசாக வதங்கியதும் சோயா சாஸ் ஊற்றவும்.உப்பு சேர்க்கவும்.சாஸில் உப்பு இருக்கும்,கவனமாக போடவும்.பின் க்ரில் செய்த சிக்கனை போட்டு கிளறவும்.

*பின் வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

பின் குறிப்பு :

*விரும்பினால் இதனுடன் தக்காளி கெட்சப்பை சோயாசாஸ் சேர்க்கும் போது சேர்க்கலாம்.இதில் சிக்கனை நான் க்ரில் செய்து செய்துள்ளேன்.

Related Videos