காக்டெயில்
தயாரிக்கும் நேரம் : 10 - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:மாம்பழம் - 2
லைம் - 1
ராஸ்பெர்ரி சிரப் - 1/2கப்
லெமனேட் - தேவைக்கு
செய்முறை விளக்கம்:*மாம்பழத்தை தோல் மற்றும் கொட்டை நீக்கி விழுதாக சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.
*க்ளாசில் சிறிது ஐஸ்கட்டிகள் போட்டு கால் கப் ராஸ்பெர்ரி சிரப் ஊற்றவும்.
*பாதி லைம் பிழியவும்,பின் மாம்பழ சாறு பாதியளவு ஊற்றவும்.
*பின் லெமனேட் ஊற்றி பரிமாறவும்.
பி.கு
*மாம்பழத்துக்கு பதில் மெலன் அல்லது தர்பூசணி பயன்படுத்தலாம்.