பிஸிபேளாபாத்(சாம்பார் சாதம்) | Authentic Bisi bele bath
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 1/2 கப்
துவரம் பருப்பு - 1 1/2 கப்
சின்ன வெங்காயம் - 10
நறுக்கிய முருங்கைகாய்,கத்திரி,கேரட்,குடமிளகாய் - 2 கப்
பட்டர் - 3 டேபிள்ஸ்பூன்
புளிகரைசல் - 1 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெயில் வறுத்து பொடிக்க:
தனியா - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 1 /2 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
செய்முறை விளக்கம்:
*குக்கரில் அரிசி, துவரம்பருப்பு, புளிகரைசல், காய்கள், வறுத்த பொடி, மஞ்சள்தூள், உப்பு மற்றும் 6 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
*வெந்ததும் பட்டரில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயத்தை வதக்கி சாதத்தில் கொட்டி மல்லித்தழை தூவி நன்கு கிளறி பறிமாறவும்.