பட்டர் சிக்கன் | Butter Chicken
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் -1 பெரியது
தக்காளி - 1 பெரியது
கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பால்/ப்ரெஷ் க்ரீம்- 1/4 கப்
சர்க்கரை -1 டீஸ்பூன்
முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சிக்கனில் ஊறவைக்க:
வரமிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 3/4 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
தாளிக்க:
கிராம்பு -3
ஏலக்காய் -2
செய்முறை விளக்கம்:
*சிக்கனை சுத்தம் செய்து நீரை நன்கு வடிகட்டி ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் அவனில் 270°C 10 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
*வெங்காயத்தை தோலுரித்து முழுதாக கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு எடுக்கவும்.அதே நீரில் முந்திரியையும் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
*தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோலுரித்து வைக்கவும்.
*பின் ஆறியதும் வெங்காயம், தக்காளி மற்றும் முந்திரி சேர்த்து நைசாக அரைக்கவும்.
*பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்து அரைத்த வெங்காயதக்காளி விழுது, மிளகாய்த்தூள், உப்பு மற்றும் தேவைக்கு நீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடம்.
*பின் க்ரில் சேர்த்த சிக்கன் மற்றும் கசூரி மேத்தி சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
*பின் பால் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவைத்து சர்க்கரை சேர்த்து இறக்கவும்.
*பட்டர் நாணுடன் பரிமாறியிருக்கேன்
பின் குறிப்பு :
*ப்ரெஷ் க்ரீம் சேர்க்கும் போது கொதிக்கவைக்ககூடாது.ஊற்றியதும் இறக்கிவிடவும்.
*சர்க்கரை சேர்ப்பது சுவையைக் கொடுக்கும்.
*அவன் இல்லாதவர்கள் சிக்கனை க்ரில் செய்வதற்கு பதில் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சிக்கனை போட்டு 10 நிமிடங்கள் வதக்கி எடுத்து தனியாக வைத்து பின் அதே கடாயில் மீதள்ள செய்முறையை போல் செய்யவும்.
*விரும்பினால் க்ரேவி கொதிக்கும் போது ரெட் கலர் சேர்க்கலாம்.