சிக்கன் கொத்து பரோட்டா | Chicken Kothu Parotta

இதில் முக்கியமானது பரோட்டாவை நன்கு 10 நிமிடம் வரை கொத்தினால் தான் நன்றாகவும் உதிரியாகவும் வரும்.

தேவையான பொருட்கள்:

பரோட்டா - 4
சிக்கன் சால்னா - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
முட்டை - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய்+உப்பு = தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பின் நறுக்கிய தக்காளியில் பாதியளவு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

*இதனுடன் பரோட்டாவை கைகளால் பிய்த்து போட்டு லேசாக வதக்கவும்.

*பாத்திரத்தின் ஓரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டைகளை உடைத்து ஊற்றவும்.

*முட்டை பாதியளவு வெந்ததும் பரோட்டவுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.

*இப்போழுது சிக்கன் சால்னாவை ஊற்றவும் சிக்கன் எலும்பில்லாமல் சேர்க்கவும்,எலும்புட,ன் இருந்தால் சதைப்பகுதியை தனியாக எடுத்து சேர்க்கவும்.

*இதனை அனைத்தையும் நன்றாக கிளறி டம்ளரில் நன்கு 10 நிமிடங்கள் கொத்திவிடவும்.

*பரோட்டா நன்கு உதிரியாக வந்தவுடன் மீதமுள்ள தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 1 முறை கிளறி இறக்கவும்.

*சூடாக பரிமாறவும்.

Related Videos