முனியாண்டி விலாஸ் ஸ்டைல் சிக்கன் குழம்பு | Muniyandi Vilas Style Chicken Kuzhambu

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 3/4 கிலோ
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு -1 டேபிள்ஸ்பூன் நசுக்கியது
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
அரைத்த தேங்காய் விழுது -1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை -அலங்கரிக்க
உப்பு+நல்லெண்ணெய் =தேவைக்கு

தாளிக்க:

பிரியாணி இலை - 2
காய்ந்த மிளகாய் -2
கடுகு -1/2 டீஸ்பூன்

வறுத்துப் பொடிக்க:

காய்ந்த மிளகாய் -3
கொத்தமல்லிவிதை -1 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி - 3/4 டீஸ்பூன்
மிளகு+சீரகம் -தலா 3/4 டீஸ்பூன்
சோம்பு -1/2 டீஸ்பூன்
கசகசா -1/4 டீஸ்பூன்
பொட்டுக்கடலை -1/2 டீஸ்பூன்
பட்டை -சிறுதுண்டு
ஏலக்காய் -1
கிராம்பு -2
கொப்பரைத்துறுவல் - 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளிக்கவும்.

*பின் வெங்காயம், நசுக்கிய இஞ்சி பூண்டு, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் சிக்கன் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கி மஞ்சள்தூள் மற்றும் அரைத்த பொடி சேர்த்து வதக்கவும்.

*மசாலா நன்கு வதங்கியதும் 1 கப் நீர் மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கிளறவும்.

*மூடி போட்டு  வேகவைக்கவும்.சிக்கன் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பின் குறிப்பு :

*அவரவர் காரத்திற்கேற்ப காய்ந்த மிளகாயினை சேர்க்கவும்.

*தேவைக்கேற்ப  நீர் தேங்காய் விழுதினை சேர்த்த பின் சேர்க்கவும்.

*கொப்பரைத்துறுவல் இல்லையெனில் ப்ரெஷ் தேங்காய்த்துறுவலை வெறும் கடாயில் நன்கு பொன்னிறமாக வறுத்து சேர்க்கலாம்.

*தாளிக்கும் போது சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

Related Videos