கல்மி கபாப் | Kalmi Kabab


எப்போழுதும் கபாப் செய்வதற்கு தொடை பகுதியை பயன்படுத்தி தான் செய்ய வேண்டும்,அதுதான் கபாப்பிற்கு நல்ல சுவையைக் கொடுக்கும்.

இதனை எலுமிச்சை சாறு+உப்பு+மிளகாய்த்தூள் சேர்த்து முதலில் ஊறவைத்த பின் மர்ற தயார் செய்த மசாவுடன் ஊறவைத்து க்ரில் செய்வது மிக சுவையைக் கொடுக்கும்.

முதல் நாள் இரவே ஊறவைத்து செய்வது நன்றாக இருக்கும்.அப்படி நேரமில்லை என்றால் குறைந்தது 3 மணிநேரமாவது ஊறவிடுவது நல்லது.

ஊறவைக்கும் நேரம் : முதல்நாள் இரவு அல்லது 3 மணிநேரம்
தயாரிக்கும் நேரம் : 15 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

சிக்கன் தொடைப்பகுதி -4
வெண்ணெய் -1/4 கப்(உருகியது)
வட்டமாக நறுக்கிய வெங்காயம் -அலங்கரிக்க‌

சிக்கனில் ஊறவைக்க -1

எலுமிச்சை சாறு  -1 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
உப்பு- 3/4 டீஸ்பூன்

சிக்கனில் ஊறவைக்க- 2

கடுகு எண்ணெய் -1டேபிள்ஸ்பூன்+1 டீஸ்பூன்
தயிர் -1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது  -1 டேபிள்ஸ்பூன்+1 டீஸ்பூன்
கசூரி மேத்தி- 1 டேபிள்ஸ்பூன்
புதினா இலைகள்- 12
கொத்தமல்லி இலை- 2 டேபிள்ஸ்பூன்(பொடியாக நறுக்கியது)
வரமிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் -2 டீஸ்பூன்
காஷ்மிரி மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்(கலருக்காக)
சீரகத்தூள் -3/4 டீஸ்பூன்
கரம் மசாலா -1/2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*சிக்கனை நன்றாக கழுவி ஈரம் போக கிச்சன் பேப்பரில் துடைக்கவும்.

*சிக்கனில் ஊறவைக்க -1 ல் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து சிக்கனில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

*புதினாவை பொடியாக நறுக்கி இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி இலையையும் சேர்த்து ஒன்றும் பாதியாக நசுக்கிக் கொள்ளவும்.

*பின் சிக்கனில் ஊறவைக்க -2ல் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து முதலில் ஊறிய சிக்கனுடன் சேர்த்து கலந்து முதல் நாள் இரவே அல்லது 3 மணிநேரங்கள் ஊறவைக்கவும்.

*பேக்கிங் டிரேயில் அலுமினியம் பேப்பர் போட்டு சிக்கனை வைக்கவும்.

*முற்சூடு செய்த அவனில் 270°C ல் 25 நிமிடங்கள் பேக் செய்யவும்.

*இடையிடையே சிக்கனை திருப்பி விடவும்.

*சிக்கன் வெந்ததும் 300°C ல் க்ரில்லிங் மோடில் 10 நிமிடம் மீண்டும் பேக் செய்து எடுக்கவும்.

*பேக் செய்த பின் வெண்ணெயை ப்ரெஷ்ஷால் வெந்த சிக்கன் மேல் தடவி விடவும்.
பின் குறிப்பு :

*அவரவர் அவனுக்கேற்ப டைம் மாறலாம்.

* காரத்தினை அவரவர் காரத்திற்கேற்ப சேர்க்கவும்.நான் கொஞ்சம் அதிகமாகவே சேர்த்திருக்கேன்.

*பார்ட்டியில் இதனை புதினா சட்னியுடன் பரிமாறலாம்.

Related Videos