செட்டிநாடு மட்டன் சுக்கா | Chettinad Mutton Chukka

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ
நறுக்கிய சின்ன வெங்காயம் -20 எண்ணிக்கை
நறுக்கிய தக்காளி - 1
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
நறுக்கிய பூண்டுப்பல் - 5
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
கசகசா+சோம்பு - தலா 1 டீஸ்பூன்

தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 2
பட்டை - சிறுதுண்டு
கறிவேப்பிலை -10 இலைகள்
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு 1 டேபிள்ஸ்பூன் நறுக்கிய வெங்காயம், பூண்டுப்பல், மட்டன் சேர்த்து வதக்கி தனியாத்தூள், 1 டீஸ்பூன் வரமிளகய்த்தூள் மற்றும் சிறிது உப்பு  சேர்த்து வதக்கி தேவையான நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*வெந்ததும் கறி மற்றும் வேகவைத்த நீர் தனிதனியாக வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து இஞ்சிப்பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, மீதமுள்ள தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

*பின் அரைத்த தேங்காய் விழுது மற்றும் கறிவேகவைத்த நீர் சேர்த்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.

*அடிக்கடி கிளறி விடவும் இல்லையெனில் அடிப்பிடிக்கும்.

*கிரேவி திக்கானதும் வேகவைத்த கரியை சேர்த்து சுருள கிளறி இறக்கவும்.

Related Videos