நெஞ்சு எலும்பு குழம்பு / Nenju Elumbu Kuzhambu

தேவையான பொருட்கள்:

நெஞ்சு எலும்பு - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் -2 கப்

தக்காளி -1 பெரியது

இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

தனியாத்தூள் -1 டேபிள்ஸ்பூன்

வரமிளகாய்த்தூள் -2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

கெட்டி தேங்காய்ப்பால் -1/4 கப்

தாளிக்க: 

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

பட்டை - சிறுதுண்டு

கிராம்பு -3

ஏலக்காய் -1

பிரியாணி இலை -2

செய்முறை விளக்கம்:

*குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து,நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

 *வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.பின் தக்காளி சேர்க்கவும்.

 *தக்காளி நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்த எலும்பினை சேர்த்து நன்றாக வதக்கவும்.

 *எலும்பின் நிறம் மாறியதும் தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

 *தேவையான நீர் மற்றும் உப்பு சேர்த்து 4 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

 *கடைசியாக தேங்காய்ப்பால் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

பின் குறிப்பு:

*இந்த குழம்பிற்கு சின்ன வெங்காயம் சேர்த்து செய்யவும்.

Tag : மட்டன் எலும்பு குழம்பு மட்டன் எலும்பு குழம்பு வைப்பது எப்படி எழும்பு குழம்பு மட்டன் குழம்பு செய்வது எப்படி ezhumbu kulambu paruppu elumbu kulambu mutton elumbu kulambu eppadi elumbu kulambu madras samayal mutton elumbu kulambu madras samayal elumbu kulambu sivakasi samayal gramathu elumbu kulambu mutton kulambu elumbu kulambu solais.

Related Videos