வாத்துகறி குழம்பு | Duck Kuzhambu
வாத்து மிகவும் கொழுப்புதன்மை நிறைந்தது.அதனை தோலுடன் தான் சமைக்கனும்.அப்போதான் நல்லாயிருக்கும்.சமைக்கும் போது எண்ணெய் குறைவாக பயன்படுத்தவும்.
தேவையான பொருட்கள்:
வாத்துகறி - 1 கிலோ
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 2
நீளவாக்கில் அரிந்த தக்காளி - 2
கீறிய பச்சை மிளகாய் - 10
மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
முழுப்பூண்டு - 2
பிரியாணி இலை - 4
புளிக்கரைசல் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*வாத்தை மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம் செய்யவும்.
*புளிகரைசலில் கறி, உரித்த முழுப்பூண்டுபற்கள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு வடகத்தை பொரித்து தனியாக வைத்து,அதே எண்ணெயில் தேங்காயையும் பொன்னிறமாக வறுக்கவும்.
*வடகம்+தேங்காய் மைய அரைத்து கடைசியாக சீரகம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் மிளகுத்தூள் என் ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.
*வதங்கியதும் புளிகரைசலோடு இருக்கும் கறியை ஊற்றி கொதிக்கவிடவும்.கறி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
*இந்த குழும்பு புளிப்பாக இருந்தால் தான் நன்றாகயிருக்கும்.அதனால் புளிப்புக்கேத்த மாதிரி புளியை ஊறவைக்கவும்.
Tag :vaathu kari kulambu seivathu eppadi | vaathu kari benefits in tamil | vaathu kari seivathu eppadi | duck gravy recipe | indian vaathu kari nanmaigal