தமிழ் கவிதைகள்– Part 7
உன் வாழ்வில்
வரும் சிக்கல்களை
கடக்கும் போது
சிரித்துக் கொண்ட
கடக்க முடிந்தால்
உலகில் உன்னை விட
வலிமையானவர் யாருமில்லை
----------------------------------------------------------------
அளவோட இருந்தால்
மட்டுமே அதுக்கு மதிப்பு
அன்பா இருந்தாலும்
----------------------------------------------------------------
இவ்வாழ்வு எப்போதும்
அழுது தீர்ப்பதற்காக
அல்ல கொண்டாடி
மகிழ்வதற்காகவும் தான்
----------------------------------------------------------------
எல்லைமீறிய கோபத்திலும்
கையிலிருக்கும் செல்போனை
விட்டெறிய கூடாது
என்றிருக்கும் நிதானம்
வார்த்தைகளில்
இருப்பதில்லை நம்பலருக்கும்.
----------------------------------------------------------------
பொருட்களை பயன்படுத்துங்கள்
நேசிக்காதீர்கள்....
மனிதனை நேசியுங்கள்
பயன்படுத்தாதீர்கள்...
----------------------------------------------------------------
பாதை இல்லாத போதும்
உன் பாதங்களை பதிய வை...!
புதிய பாதை ஆகட்டும்...
----------------------------------------------------------------
கவிதையின்
முதல் மொழி
குழந்தையின்மழலை......ம் மா.......
----------------------------------------------------------------
பொம்மைகளுடன்
பொம்மையாக மாறும்
அழகுபொம்மை குழந்தை
----------------------------------------------------------------
கோபத்திற்கு
இருக்கும் மரியாதை
யாரும் புன்னகைக்கு
கொடுப்பதில்லை...
----------------------------------------------------------------
பேரின்பம் வேண்டாம்
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும்
நம் வாழ்வை
அனுபவித்து வாழ...!
Tag : தமிழ் கவிதைகள் | Tamil Life Quotes | Tamil Motivational Quotes | தமிழ் அன்பு கவிதை | தமிழ் தத்துவம் | Tamil Kavithai SMS