தமிழ் காதல் கவிதைகள் - PART 9
நீ இல்லாத
தருணங்கள் கூட
தனிமை என்பதை
யான் அறியேன்
அப்போது
உன் நினைவுகளில்
நான் மூழ்கியிருப்பேன்
----------------------------------------------------------------
காத்துக் கிடத்தலின்
சுகம் அறிகிறேன்
என் காதலே
நீ என்னை தழுவும்
நொடிகளுக்காக
----------------------------------------------------------------
சிறுசிறு சண்டைகள்
காதலின் அம்சம்
பார்வைகள் சந்தித்தால் ஊடலும் ம(ப)றந்துபோகும் ❤️
----------------------------------------------------------------
தோற்றுத்தான் போகின்றது
என் பிடிவாதம்
உன் அன்பின் முன்