தமிழ் காதல் கவிதைகள் - PART 6
சுகமான
உன் நினைவு
தான் சுமையாகி
கனக்கின்றது
உனை காணாத
போது
----------------------------------------------------------------
உன் தாமதத்தில்
திட்டி தீர்க்கிறேன்
கடிகார முட்களை
மெதுவாக நகர்வதாய்
உனை திட்ட
மனமின்றி
----------------------------------------------------------------
கடத்துகிறாய்
காந்த கண்களால்
நழுவுகிறது
இதயமும்
உன் பக்கம்
----------------------------------------------------------------
உறங்காமல்
ஒரு கனவு
உன் அன்பின்
துளிகளை
பஞ்சணையாக்கி
----------------------------------------------------------------
உனை ரசித்தே
என் விழிகளும்
அழகானது
----------------------------------------------------------------
மனதோடு நீ
மகிழ்வோடு நான்
----------------------------------------------------------------
உன்னை முந்தி கொண்டு
ஓடோடி வந்து
விடுகிறது
என்னை தொல்லை
செய்ய
உன் நினைவுகள்
இம்சைகளும்
இன்பமே உன்னால்
----------------------------------------------------------------
தொலைவு
ஒன்றும் தூரமில்லை
உன் குரல்
செவியோடு
இருப்பதால்
----------------------------------------------------------------
உன் ஆரவாரம்
இல்லையெனில்
என் உள்ளமும்
அசைவற்ற அகிலமே
----------------------------------------------------------------
அடிக்கடி
உனை தேடுகிறேன்
பொழுது போகாததால்
அல்ல நீயே
என் பொழுதென்பதால்
Tag : kadhal kavithaigal in Tamil language 2019 | தமிழ் காதல் கவிதைகள் | தமிழ் லவ் எஸ் எம் எஸ் | லவ் Quotes | Whatsapp Tamil Love Status | Tamil Love Kavithai SMS | Love Quotes in Tamil Font