தமிழ் Facts – part 9

முகமூடிகள்

மதிக்கப்படுகின்றது

முகங்கள்

மிதிக்கப்படுகிறது

----------------------------------------------------------------

பிரகாசமான தருணத்தில்

எல்லோராலும்

உங்களை நேசித்திட முடியும்

இருண்ட பொழுதுகள்

வரும் போது

யார் பொய் என்றும்

புரிந்திட முடியும்

(சந்தர்ப்பவாதிகள்)

----------------------------------------------------------------

சண்டையிட்ட நாளே

சமாதானமாகும்

உறவுகள் கிடைப்பது

வரமே

----------------------------------------------------------------

ஆபத்தில் அறியலாம்

சில உறவுகளின்

குணங்களையும்

அவர்களின்

முக்கியத்துவத்தையும்

----------------------------------------------------------------

சூழ்நிலைகள் மாறும்போது

சிலரது வார்த்தைகளும் மாறும்

சிலரது வாழ்க்கையும் மாறும்

----------------------------------------------------------------

சுயநலமின்றி

வாழ்பவரை விட

சுயநலமாக மட்டுமே

வாழ்பவரின் வாழ்க்கை

மிக நிம்மதியாக தான் இருக்கு

----------------------------------------------------------------

தோல்வி வரும் போது

நம் மனம் துவண்டு போகாமலும்

வெற்றி பெறும் போது

துள்ளாமலும் இருத்தலே

நம் வாழ்வின் உயர்விற்கு

வழிவகுக்கும்

----------------------------------------------------------------

தவறவிட்டவையெல்லாம்

என்றாவது ஒரு நாள்

கிடைத்து விடும் என்ற

நம்பிக்கையில் தான்

வாழ்கிறோம்

----------------------------------------------------------------

ஏதோவொரு நிகழ்வு

தினமும் நம்மை

எச்சரித்து கொண்டுதான் இருக்கு

நாம் தான் அதை

அலட்சியமாய்

கடந்து கொண்டிருக்கின்றோம்

----------------------------------------------------------------

ஒவ்வொன்றும் அவ்வளவு

எளிதாகிப் போவதில்லை

ஒவ்வொரு ஏமாற்றத்திற்கு

பிறகு கிடைக்கும் மாற்றம்

----------------------------------------------------------------

ஒவ்வொரு நிமிடமும்

சந்தோஷமாக இருக்க முடியும்

வருவது வரட்டும்

நடப்பது நடக்கட்டும்

வாழ்ந்து காட்டுவோம்

சாதித்து காட்டுவோம்

என்ற மன உறுதி இருந்தால்

----------------------------------------------------------------

உண்மையை

உரக்க சொன்னாலும்

நம்பாத இந்த உலகம் தான்

பொய்யை முனுமுனுத்தாலும்

நம்பி விடுவது தான் எதார்த்தம்

----------------------------------------------------------------

எல்லோரும் நீங்கள்

உயர்வதை விரும்புவார்கள்

ஆனால்

அவர்களை விட அல்ல

----------------------------------------------------------------

நமக்குள்

வெறுமையான இடத்தில்

முடிந்த வரை

சந்தோஷங்களை

நிரப்பிக் கொள்வோம்

இல்லையெனில்

அந்த இடங்களில்

பிரச்னைகள் தானாக

நிரம்பிக் கொள்ளும்

TAG:தமிழ் Facts | Tamil Life Quotes | Tamil Motivational Quotes | Tamil Quotes | Tamil Status | தமிழ் SMS and Kavithaigal | Tamil Random Facts and kavithai

Related Videos