தன் வினை தன்னைச் சுடும்

பட்டினத்தார் துறவியாக போனபோது அவருடைய தாய் அவர் வயிற்றில் ஒரு சீலைத் துண்டைக் கட்டுகிறார்.. இந்தச் சீலைத்துண்டு என்று அவிழ்கிறதோ அன்று நான் இறந்துவிட்டேன் என்று அர்த்தம் என்று கூறி அனுப்புகிறாள்.

பரதேசியாக அலைந்த பட்டினத்தாரின் வயிற்றில் இருந்த சீலை ஒரு நாள் அவிழ்கிறது. தன்னை வயிற்றில் கட்டி சுமந்தவள் இறந்துவிட்டாள் என்பது வயிற்றில் கட்டிய சீலை அவிழ்ந்தபோது தெரிகிறது.

காடு மலைகளை தாண்டி கதறியபடி ஓடி வருகிறார்.

தாயின் உடலில் இருந்த விறகையெல்லாம் எடுத்து வீசுகிறார்.. குளிர்ந்த வாழை மட்டையில் தாயின் உடலை கிடத்தி, முன்னையிட்ட தீ முப்புரத்திலே பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே, அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே.. நானுமிட்ட தீ மூழ்க மூழ்கவே என்று பாடுகிறார்…

அந்தத் தமிழ் கேட்டு, சுடலையில் கிடந்த வாழை மட்டை தீப்பிடித்து எரிகிறது.. அன்பு பெருக்கெடுத்து கண்களில் ஆறாய் ஓடுகிறது

மகன் சொன்ன காதற்ற ஊசியின் தத்துவத்தால் எல்லாவற்றையும் கழித்துவிட்டு கழித்தல் அடையாளத்தை துறவாக்கிய பட்டினத்தாரைப் பார்த்த தமக்கை கோபமடைகிறாள். தமது குடும்பம் சந்தி சிரிக்கிறது என்று தப்பாகக் கணக்கு போடுகிறாள்.

ஒரு நாள் அவள் மனம் மாறுகிறது.. அப்பத்தில் நஞ்சைத் தடவி அவருக்கு பிச்சையாக கொடுக்கிறாள்.

தன் வினை தன்னைச் சுடும்.. ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்றபடி ஓட்டில் தூக்கி வீசுகிறார். வீடு தீப்பற்றி எரிகிறது.

காரும், வீடும் வாங்கி, காசும் பணமும் வங்கியில் போட்டு, சகோதரங்களை நஞ்சு மனத்துடன் கொல்ல வரும் சகோதரங்களை வீட்டோடு சேர்த்துக் கொழுத்துகிறது அவருடைய தமிழ்.. உடன் பிறப்பை வெறும் போலிக் கௌரவத்திற்காக உலகிலிருந்தே பிரிக்க முயலும் சுயநலமிக்க ஓர் அக்காளை பிரித்தல் அடையாளமாகக் காண்கிறார்.

ஊருஞ்சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல.. தேசத்திலே யாரும் சதமல்ல என்று எல்லா செல்லாக்காசுகளையும் வீசியெறிந்த வீரத்தமிழனாக அவர் வீதியில் நின்றார்.

இப்படி நின்ற அவரை அரச அதிகாரம் மிரட்டுகிறது. மரண தண்டனை விதிப்போம் என்ற மிரட்டலில் மக்களை அஞ்ச வைத்து ஆட்சி நடத்தும் கூட்டம் விழித்துக் கொள்கிறது. அவரை திருடன் பட்டம் கட்டி கழு மரத்தில் ஏற்ற உத்தரவிடுகிறது.

கழு மரத்தின் முன் நின்று, அவர் பாடிய தமிழில் கழுமரமே பற்றி எரிந்து சாம்பலாகிறது.

கடற்கரையோரத்தில் உள்ள உப்புக் கரும்பில் ஒரு கரும்பு இனிப்பாக பிறக்கும் அதைக் கண்டு பிடித்தால் மோட்சமடையலாம்.. என்று அது கூறுகிறது.

சுடலைக் கரும்பு இனிக்குமா என்று தினசரி கடித்து வந்த பட்டினத்தார்.

 பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்

தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்

பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்

உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்

புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்..

பட்டினத்தார் ஞானம் பெறுகிறார் ...

பின் ஒரு நாள் கரும்பு இனிக்கிறது ....

இறைவனுடன் இரண்டற கலக்கிறார் ...

அவர் உடல் திருவெற்றிஊரில் சிவலிங்கமாக மாறிவிட்டது.

 சிவனென்றிரு மனமே

 பகிர்தல் ஒரு மிகச் சிறந்த பண்பாடு மட்டுமல்ல வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்

பகிருங்கள்

Related Videos