சிவ தரிசன நேரங்களும் பலன்களும்!
சிவ பெருமான் கோவிலுக்கு எந்த காலத்தில் (நேரம் ) போக உத்தமம் ,அங்கே எந்த காலத்தில் தியானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்? என்ற கேள்விகளுக்கு பதில் காண்பதே இப்பதிவின் நோக்கம்.
திங்கள் கிழமை வரும் அமாவாசை நாளில் ராகு காலத்தில் (காலை 7-30 முதல் 9-00 மணிக்குள்)சிவ பெருமானை தரிசனம் செய்தால் மன வியாதிகள் மற்றும் குழப்பமான நம் சூழ்நிலைகள் மாறும் .
செவ்வாய் கிழமை அன்று வரும் எமகண்ட நேரத்தில் (காலை 9-00 முதல் 10-30)சிவ பெருமானை தரிசனம் செய்தால் கடன் தொல்லைகளில் இருந்து
விடு பட முடியும் .
புதன் கிழமை அன்று சிவ பெருமான் கோவிலுக்கு சென்று அதிகாலை நடை திறந்தவுடன் முதல் தரிசனம் செய்ய அல்லது அபிஷேகம் செய்ய தொழில்
உத்யோகம் வளர்ச்சி உயர் பதவி கிடைக்கும் .
வியாழன் இரவு சுவாமியை பள்ளியறைக்கு எழுந்தருள செய்யும் நேரத்தில் (கடைசி தரிசனம் )செய்தால் இணையில்லா செல்வம் கிடைக்கும் .
வெள்ளியும் பௌர்ணமியும் சேரும் காலத்தில் (மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள்)சிவ பெருமானை தரிசனம் செய்தால் மஹா லக்ஷ்மி அருள் கிடைக்கும் .
சனி கிழமை ராகு காலத்தில் (காலை 9-00 முதல் 10-30)சிவ பெருமானை தரிசனம் செய்தால் கர்மவினைகள் கலைந்து விடும்.
ஞாயிறு கிழமை அன்று ராகு காலத்தில்(மாலை 4-30முதல் 6-00)சிவ பெருமானை தரிசனம் செய்தால் எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் விலகி தைரியம் ஏற்படும் .
இவைகளை விட மிக மிக முக்கியம் லிங்கோத்பவ காலத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் பிறவா நிலையினை அடையலாம் .
லிங்கோத்பவக்காலம் என்பது
திரியோதசியும் சதுர்த்தசியும் சந்திக்கும் காலத்தின் பெயர் லிங்கோத்பவ காலம் எனப்படும்
அதாவுது அமாவாசை/பவுர்ணமி தொடங்கி 13வது நாள் முடிந்து 14 வது நாள் தொடங்கும் காலம் .
இந்த இரு வேளையும் சந்திக்கும் காலம் .
தமிழில் சதுர்த்தசி என்பதை சிவராத்திரி(இரவு ) என்பார்கள்.
இது ஒரு ஒரு வளர்பிறை அன்றும் தேய்பிறை அன்றும் வரும் .
லிங்கோத்பவ காலம் எப்பொழுது தோன்றும் என்று எந்த பஞ்சாங்கதிலும் குறிப்பிடுவது இல்லை .
நாமதான் இதனை கவனித்து லிங்கோத்பவ காலவேளையில் சிவலிங்க தரிசனம் செய்தால்
சிவபெருமானை அந்த வேளையில் அடையலாம் .
திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுத்த நாள் சிவராத்திரி.
அப்படிச் சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவ காலம்னு சொல்லப்படுகிறது.
சிவராத்திரி அன்று நள்ளிரவு கடைசி 14 நாழிகை அதாவது இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரையான காலம் லிங்கோத்பவ காலம் என்றழைக்கப்படும்.
சிவனை இந்த லிங்கோத்பவ கால நேரத்தில் நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும். சவுக்யமாக வாழ ஒரு வழி கிடைக்கும்.
உங்களை வழிபடுவதில் எந்த வழிபாடு உங்களுக்கு மிகவும் பிடித்தது...?’’ என்று பார்வதி சிவனிடம் கேட்க, ‘‘சந்தேகமே வேண்டாம்,தேவி
மகாசிவராத்திரிதான் எனக்கு மகிழ்ச்சி தரும் நாள் என சிவன் கூறினார்.
விலையுயர்ந்த பட்டாடைகள், நகைகளை, மலர்களைவிட வில்வ இலைகளால் எனக்கு அர்ச்சனை செய்வதுதான் சிறந்தது. மகாசிவராத்திரி நாளில் இரவின் முதல் காலத்தில் பாலினாலும், இரண்டாம் பகுதியில் தயிரினாலும், மூன்றாம் பகுதியில் வெண்ணெய் அல்லது பசு நெய்யினாலும், கடைசியில் தேன் அபிஷேகம் செய்தும் என்னை குளிர்வித்து அருள் பெறலாம்’’ என சிவபெருமானே பூஜை செய்யும் முறைகளை தேவியிடம் விளக்கியிருக்கிறார்.
இந்த லிங்கோத்பவகாலம் மாசி மாதம் மஹா சிவ ராத்திரி அன்று இரவுமுழுவதும் இருப்பதால் மஹா சிவ ராத்திரி அன்று மட்டும் அனைத்து உயிர்களும் இரவு முழுவது கண்விழித்து
சிவபெருமானை வழிபட்டால் சிவனிடத்தில்
செல்லலாம் என்று ஆகம நூல்கள் சொல்கிறது .
*இந்த லிங்கோத்பவ வேளையில் சிவலிங்க தரிசனம் செய்ய முடியாவிட்டாலும்
நம்முடைய மனதால் ,எண்ணத்தால் , வாக்கினால் கீழ்கண்ட அஷ்ட சிம்மாசன நாமங்களை சொல்லுங்கள்*
1.ஸ்ரீ பவாய நம
2. ஸ்ரீ சர்வாய நம
3.ஸ்ரீ ருத்ராய நம
4.ஸ்ரீ பசுபதே நம
5.ஸ்ரீ உக்ராய நம
6.ஸ்ரீ மகாதேவாய நம
7.ஸ்ரீ பீமாய நம
8.ஸ்ரீ ஈசானாய நம
இவைகளை சொல்ல முடியாவிட்டால்
"சிவாய நம" எனவும்
இதுவும் சொல்ல முடியாவிட்டால்
"சிவய வசி" எனவும்
இதுவும் சொல்ல முடியாவிட்டால்
"ஓம் சிவ சிவ ஓம்"
என்று சொல்ல சொல்ல சிவ கதியினை அடையலாம்.
எனவே அன்பர்கள் ,பக்தர்கள் ,
சிவபித்தர்கள் அனைவரும் லிகோத்பவ காலத்தில் சிவலிங்க
தரிசனம் செய்து சிவபெருமானை அடைவோமாக!!!!!