நவபாஷாண பைரவர்
சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோயில் சுகந்தவனேசுவர் ஆலையம் இங்கே இரட்டைமுக பைரவர் மேற்கு நோக்கியவாறு காட்சியளிக்கிறார்.
பழனிமலையில் முருகக்கடவுளை நவபாஷாணத்தால் வடிக்கும் முன்பே,இங்கே பைரவப் பெருமானின் வடிவத்தை நவபாஷாணத்தால் உருவாக்கியிருக்கிறார்.
எட்டுக் கைகள்,ஆயுதம் ஏந்திய கபால மாலையுடன் காட்சியளிக்கும் நவபாஷாணபைரவப் பெருமானுக்கு பவுர்ணமி நாட்களில் மாலை நேரத்தில் சிறப்பு வழிபாடுகள் 12,000 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
பைரவப்பெருமானின் சிலை அதிக சக்திவாய்ந்த நவபாஷாணத்தால் ஆனது;எனவே,இதன் மருத்துவ சக்தியைத் தாங்கும் ஆரோக்கிய வலிமை கலியுக மனிதர்களுக்கு இல்லை என்பதன் அடிப்படையில் பைரவப் பெருமானுக்கு அணிவிக்கப்படும் வடைமாலை மற்றும் தீர்த்தம் பிரசாதமாகத் தருவதில்லை...
வடைமாலையை சன்னதிக்கு மேல் போட்டுவிடுகின்றனர்;கலியுக அதிசயமாகஇதை பறவைகளும் தொடுவதில்லை;அபிஷேகத் தீர்த்தம் பக்தர்கள் தொட முடியாதவாறு கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில் சனிபகவான் வடகிழக்கு மூலையான சனிமூலையில் தனியாக,பைரவப் பெருமானின் சன்னதியின் பின்புறம் வன்னிமரத்தடியில் காட்சி தருகிறார்.இவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்;இவருக்காக பைரவப் பெருமான் பின்புறம் காட்சி தருவதாக கூறப்படுகிறது.
சனிபகவானின் வாதநோயை குணப்படுத்தியவர் பைரவப் பெருமான்;மேலும்,சனியின் குரு பைரவப்பெருமானே!பைரவப் பெருமானின் அவதார நட்சத்திரம் பரணி நட்சத்திரம் ஆகும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கே தொடர்ந்து ஆறு பரணி நட்சத்திர நாட்களில் இங்கே வந்து ராகு காலத்துக்கு முந்தைய முகூர்த்தத்தில் மூலவரான சுகந்தவனேசுவரர்+சமீபவல்லிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;
அதன்பிறகு,பைரவப் பெருமானுக்கு ராகு காலத்தில் அபிஷேகம் செய்தால் அனைத்து கர்மவினைகளும் அடியோடு முழுமையாக நீங்கிவிடும்,நிம்மதியும்,செல்வச் செழிப்பும் மிக்க வாழ்க்கை தேடிவரும்.
இந்த வழிபாடுகளைச் செய்யத் துவங்குவோர் நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்;மது அருந்தவேக் கூடாது;ஒழுக்கமாக வாழ்ந்து இந்த வழிபாடு செய்தால் இப்பிறவி முழுவதும் சகல சம்பத்துகளும் கிட்டும்;நிம்மதி நிரந்தரமாக இருக்கும்.
சிவகெங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் அமைந்திருக்கிறது.திருப்பத்தூரில் இருந்து 10 கி.மீ.தூரத்திலும்,காரைக்குடியில் இருந்து 19 கி.மீ.தூரத்திலும் அமைந்திருக்கிறது.
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ