அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில்

#தஞ்சைமாவட்டம் திருநீலக்குடியில் உள்ளது அருள்மிகு #நீலகண்டேஸ்வரர் #திருக்கோவில். பல ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த பழமையான கோவில் சோழர்களால் கட்டப்பட்டது ஆகும்

இத்தல இறைவனின் பெயர் நீலகண்டேசுவரர் இறைவியின் பெயர் ஒப்பிலாமுலையாள் ஆகும். இத்தலத்தில் இறைவன் நீலகண்டேஸ்வரருக்கு செய்யப்படும் நல்லெண்ணய் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எவ்வளவு எண்ணெயை ஊற்றினாலும் அதை அப்படியே தன்னுள் உறிஞ்சிக்கொள்ளும் ஒரு அதிசய சிவலிங்கத்தை கொண்ட திருத்தலம்தான் திருநீலக்குடி சிவன் கோவில்.

இங்குள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேக பொருளாக விளங்குவது நல்லெண்ணெய். பாத்திரம் பாத்திரமாக நல்லெண்ணையை சுவாமியின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்.  

எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது. 

#நாள்முழுவதும் எண்ணெய் அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் #உறிஞ்சப்பட்டுவிடுகிறது.

 இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்த நாள் சுவாமியை பார்த்தால் அவரது லிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெயே தட வாதது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து உள்ள்து:

அபிஷேகம் செய்யப்படும் எண்ணெ யெல்லாம் எங்கு மாயமாகிறது என்பது இன் னும் 

#புலப்படவில்லை. எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால் சிவலிங்கத் திருமேனி வழுவழுப்பாக இருப்பதற்கு பதில் 

#சொர_சொரப்பாகவே இருக்கிறது.

நாள் முழுக்க பாத்திரம் பாத்திரமாக ஊற்றப் படும் எண்ணெயை சிவலிங்கம் #எப்படி_உறிஞ்சுகிறது?

 #உறிஞ்சப்படும் 

#எண்ணெய்_என்ன #ஆகிறது? 

இப்படி எந்த கேள்விகளுக்கான விடையும் இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வந்த நஞ்சை சிவன் உண்ட கதை நமக்கு தெரியும். அந்த நஞ்சின் விஷத் தன்மையை குறைக்க, சிவனின் தொண் டைப்பகுதியில், பார்வதி தேவி எண்ணை தேய்த்து தடவிவிட, 

#விஷம்இறங்காமல் சிவனின் #தொண்டையிலேயே #நின்றுவிட்டது. இதை உணர்த்தும் விதமாகத்தான் இத் தலத்து இறைவனுக்கு #திருநீலகண்டன் என்ற பெயர் உருவானதாக கூறப்படுகிறது. இதன்காரணமாகத்தான் இத்திருத்தலத்தில் 

#சிறப்பு_அபிஷேகமாக எண்ணையை பயன் படுத்தப்படுகிறது 

என்பது ஐதீகமாக உள்ளது

#திருச்சிற்றம்பலம்

Related Videos