தமிழே! அழகு மொழியே!!
"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?
அரசனும், ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!!
"இ" வுக்கு அடுத்து "ஈ" வருவதேன்?
இருப்பவன், ஈய வேண்டும் என இயம்பிட!!
"உ" வுக்கு அடுத்து "ஊ" வருவதேன்?
உழைப்பே ஊக்கம் என உணர்த்திட!!
"எ" வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்?
எதையும், ஏன் என்று சிந்தித்துப் பார்க்க!!
"ஐ" மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?
அதற்கு நான் ( ஐ ) என்ற அகம்பாவம் இருந்தால் தனிமை படுத்தப்படுவாய் என்பதனை உணர்த்த!
"ஒ" வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்?
ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட!!!
எனவே நான் ( ஐ ) தான் என்கிற குணம், ஒரு மனிதனை தனிமைப்படுத்தி, ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளி விடும்.