மீண்டும் தொடரும் "மழை" நாளை சென்னைக்கு "ரெட் அலெர்ட்"..!!
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்பொழுது அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. முதலாவதாக அரபிக்கடலில் இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகத்தை விட்டு விலகி நகரப்போவதால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் நிகழப்போவதில்லை.
ஆனால் வங்கக்கடலில் உள்ள தாழ்வுப்பகுதி மெது மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை நோக்கி நவம்பர் 18-ம் தேதி வந்தடையும். அப்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கடலில் இருந்து நிலப்பகுதிக்கு வரும்போது காற்றுக்குவிதல் ஏற்படும். அதாவது அணைத்து மேகக்கூடங்களும் ஒரே இடத்தில் குவியும். அப்போது அந்த இடத்தில் மிக கனமழை பெய்வதற்கான வாய்புகள் அதிகமாக இருக்கும்.
அதனால் கனமழை முன் எச்சரிக்கையாக மத்திய மேற்கு , தென்மேற்கு வங்கக்கடல், வட தமிழகம், தென் ஆந்திர கடலோர பகுதிகள் போன்ற இடங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
ReadAlso:தமிழ்நாடு அரசு வேலை; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...!
ரெட் அலர்ட் பகுதிகள் :
சென்னை,
திருவள்ளூர்,
காஞ்சிபுரம்,
ராணிப்பேட்டை.
போன்ற மாவட்டங்களில் 20 செ.மீ அளவிற்கு "மிக அதி கனமழை" பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.
ஆரஞ்சு அலர்ட் பகுதிகள்:
செங்கல்பட்டு,
வேலூர்,
திருவண்ணாமலை,
திருப்பத்தூர்,
விழுப்புரம்,
கடலூர்.
இந்த மாவட்டங்களுக்கு "அதி கனமழை" பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் அலெர்ட் பகுதிகள்:
கிருஷ்ணகிரி,
தருமபுரி,
சேலம்,
கள்ளக்குறிச்சி,
போன்ற மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் மட்டும் "கன மழை" -க்கு வாய்ப்பிருப்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரங்களில் சென்னையிலும், டெல்டா பகுதிகளிலும் பெய்த கனமழை போன்று இந்த முறையும் பெய்யும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக வானிலை மையங்கள் கூறியுள்ளனர்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.