கிழிந்த ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுவது????

கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியில் வேண்டுமானாலும் மாற்றலாம் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு பொதுமக்கள், வியாபாரிகள் போன்றோர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. ரூபாய் நோட்டுகள் கிழிந்து விட்டால் அதை அந்த மாநிலத்தில் உள்ள ரிசர்வ் வங்கியில் மட்டுமே மாற்ற முடியும் அதனால் சாமானிய மக்களுக்கு  அதை மாற்றுவது மிகவும் கடினமான செயலாக இருந்தது.


இந்த கிழிந்த ரூபாய் நோட்டுகளினால் பல கோடிகள் வீணாகி வருகின்றது என்பதை ஒரு ஆய்வின் மூலம் ரிசர்வ் வங்கியாளர்கள் கண்டறிந்தனர். இதனால் கடந்த ஏப்ரல் மாதம் சாமானிய மக்களும் கிழிந்த நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கு வசதியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி, அரசு வங்கி மற்றும் அதன் கிளைகள் போன்ற அணைத்து வங்கிகளிலும் மாற்றிக்கொள்ளலாம் என்ற உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்தது.

Read Also:ஒரு மணி நேரத்துல '101 கோடி' ரூபாய் வருமானம்...! 'பட்டாசு' கெளப்பிய நபர்..

ஆனால் கொரோனா காலத்தில் வங்கிகளினால் ரிசர்வ் வங்கியின் உத்தரவை பின்பற்ற முடியாமல் போனது.

இப்பொழுது மீண்டும் அணைத்து வங்கிகளிலும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுக்க வேண்டும் என்றும் உடனடியாக மக்களுக்கு நோட்டுகளை மாற்றி கொடுக்க ஏதுவாக சில்லறை நோட்டுகளை போதுமான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அணைத்து வங்கிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு அணைத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடையே மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.இந்த செய்தியை உங்களால் முடிந்த அனைவருக்கும் பகிருங்கள் யாராவது ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்கும் .


இதுபோன்ற தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள். மேலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய என்ற ecoimbatore Facebook பக்கத்தில் Join பண்ணுங்க  நன்றி.

#how to exchange torn notes from bank #where to exchange torn notes in india #Exchange Damaged And Soiled Notes From Banks #How can I change my damaged Indian currency #Can damaged money be exchanged

Related Videos