அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம்....

அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.

இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.


"ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் - அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்" - திருவள்ளுவர்

முனிவர்கள் / துறவிகள் போன்ற சான்றோர்கள் தம் தவ வலிமையினால் தமக்குப் பசி தோன்றாதவாறு தம் பசியை ஆற்றிக்கொள்வார்கள். அவ்வாறு தமது பசியை ஆற்றிக்கொள்ளும் துறவிகளின் வலிமையைக் காட்டிலும், பிறர் பசியாற உணவளித்துக் காப்பவரின் வலிமையே சிறந்தது என, அன்னதானத்தின் பெருமையைத் தெயவப் புலவர் திருவள்ளுவர் மிகவும் சிறப்பித்து கூறுகிறார்

பால் - துன்பம் நீங்கும். ஆடை - ஆயுள் கூடும். தீபம் - கண்ணொளி சீராகும். கோயில்களுக்கு தீபம் போடுவதால் அரச பதவி கிட்டும். எள் தானத்தினால் எம பயம் விலகும். வெண்கலப் பாத்திரத்தில் தேன் தானம் செய்தால் புத்திரப் பேறு கிட்டும்.


பசு தானம் செய்தால் கிரிகடன், தேவ கடன், பித்ரு கடன் என்ற மூன்று கடன்களும் தீரும். அரிசி தானம் செய்தால் சகல பாவமும் தீரும். தாம்பூலம் பழத்துடன் கொடுப்பதால் லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும்.

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். இதைச் செய்தால் சொர்க்கம் கிட்டும். தற்காலத்தில் ரத்த தானம், கண் தானம் என்று சொல்லுவார்கள். இவைகளும் சிறந்த தானங்கள் தான். ஆனால் இவற்றை எப்பொழுதும் கொடுக்க முடியாது. ரத்ததானம் செய்யவும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. நீண்ட இடைவெளியும், நோயற்ற உடலும் இருக்க வேண்டும். கண்தானமும் இறந்த பின்புதான் செய்ய முடியும். ஆனால் அன்னதானம் நினைத்த நேரத்தில் செய்ய முடியும். நெல்லிக்கனி தானம் ஞானத்தைத் தரும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் கன்னிகாதானத்தை செய்தால் பிரம்ம பதவி கிட்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

தானங்கள் தங்கள் சக்திக்கு ஏற்பச் செய்ய வேண்டும் என்பது மிக முக்கியம். இப்படிச் செய்வதனால் யம பயம் இன்றி நேராகக் கைலாயம் செல்லலாம்.


தாம்பூலம் வெற்றுத் தாம்பூலமாக தராமல் கஸ்தூரி, கோரோஜனம் சேர்த்து தாம்பூல தானத்தைத் தரவேண்டும். இதனால் ராஜகுலத்தில் பிறந்து ராஜபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பார்கள். வஸ்திர தானம் வியாதியைத் தீர்க்கும். கற்பூர தானம் சக்ரவர்த்தியாகப் பிறக்கும் பாக்கியத்தைத் தரும். தாமரைப் பூ, மல்லிகைப் பூ மாலைகளை தானமாகக் கொடுத்தால் மன்னர் குலத்தில் பிறக்கும் பாக்கியம் கிடைக்கும்.

மலர்களைப் பற்றிக் கூறும்பொழுது ஒரு சிறு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. கோயில்களில் பூவை பிரசாதமாகத் தருவதும், வீடுகளில் சுமங்கலி, கன்னிப் பெண்களுக்கு பூக்களைத் தருவதும் ஒரு சம்பிரதாய பழக்கத்துடன் கூடிய புண்ணிய செயலாகும். தாழம்பூ தானம் செய்தால் விஷ்ணுவின் அனுக்கிரகம் கிடைக்கும். பாக்கு, வாசனை திரவியங்கள், பழங்கள் தானம் செய்தால் உயர் பதவி கிட்டும். மோர், பானகம், குடி தண்ணீர் தானம் தந்தால் ஜென்மாந்திர பாவம் தீரும் என்பார்கள்.

வீட்டிற்கு வருபவர்களுக்கு மோர், தண்ணீர் கொடுத்து உபசரிப்பது கூட தானம்தான். தானிய தானம் அகால மரணத்திலிருந்து காப்பாற்றும்.

அன்னதான மகிமையை விளக்கும் கதை

கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட - தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன். தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன். அவன் இறந்ததும் கண்ணனால் சுவர்க்கத்துக்கு அனுப்பப்பட்டவன்.

அங்கு சென்று சகல வசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை. எப்பொழுதும் வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போனான். பிறகு சுவர்க்கத்தின தலைவனிடம் சென்று கேட்டான். நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் - எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை - எனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது எனக் கேட்டான்.

தலைவனோ - கர்ணா நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும் தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்துச் சொல் - எப்போழுதாவது யாருக்காகவாது அன்ன தானம் செய்திருக்கிறாயா - எனக் கேட்டான்.

கர்ணனுக்கு அன்னதானம் செய்ததாக நினைவு இல்லை. அன்ன தானம் செய்யாததால் தான் இப்பொழுது வயிற்றுப்பசி அடங்க வில்லை எனவும் கூறக் கேட்டான். அப்படியானால் இதற்கு என்ன தான் வழி எனக் கேட்ட போது - தலைவன் கூறினான் - உனது வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் - பசி அடங்கி விடும் என்றான்.


கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. விரலைச் சப்பினால் பசி அடங்குமா - என்ன இது என ஐயப்பாடு இருந்தாலும் - வேறு வழி இல்லை என வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்து சப்ப - பசி உடனே அடங்கிற்று.

ஒன்றும் புரியாத கர்ணன் - இது எப்படி மாய மந்திரம் எனக் கேட்க - தலைவன் கூறினான் - அன்பின் கர்ணா - நீ பூவுலகில் வாழும் போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்கு அன்னதானச் சத்திரம் இருக்கிறதென்று கேட்க - நீயும் உனது வலது கை ஆள்காட்டி விரலால் இதோ இப்பக்கம் செல்க என வழி காட்டினாய். அந்த புண்ணியச் செயல் - நற்செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது எனக் கூற -கர்ணனும் அன்ன தான மகிமையை உணர்ந்தான்.

- நாமும் பிறந்த நாள் - திருமண நாள் - என்று கொண்டாடும் போதெல்லாம் - முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள் - அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள் - வறியோர் இவர்களுக்கெல்லாம் அன்ன தானம் செய்தால் அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக்கும் மகிழ்ச்சியினையும் புண்ணியத்தைனையும் தரும் .

அண்ணாமலையில் அன்னதானம் செய்யுங்கள்;நிம்மதியாக வாழுங்கள்

கோயில்களில் ஒரு வருடம் தொடர்ந்து செய்யப்படும் அன்னதானத்தால்

என்ன புண்ணியம் கிடைக்குமோ, அதை விட அதிகமான புண்ணியம் காசியில்

ஒரே ஒரு நாள் ஏழை ஒருவனுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.

காசியில் ஒரு ஆண்டு முழுக்க செய்யப்படும் அன்னதானம் தரும் புண்ணியத்தை

விட அதிக புண்ணியம் திரு அண்ணாமலையில் ஒரே ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.

திருஅண்ணாமலையில் துவாதசி திதியன்று ஏழை ஒருவருக்கு செய்யப்படும்

அன்னதானமானது, அன்னதானம் செய்தவரின் வாழ்நாள் முழுக்க அன்னதானம்

செய்த பலனைத் தரும் என்பது அண்ணாமலையாரின் வாக்கு.ஆதாரம்:

அருணாச்சல புராணம்.

இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களை என்ற ecoimbatore Facebook page- ல் பதிவிடுங்கள் நன்றி ஓம் சரவணபவ....


Annathanam|  | Annadhanam palangal in Tamil| அன்னதானம் சிறப்பு | அன்னதானத்தின் மகிமை

Related Videos