காலில் செருப்பு கூட அணியாமல் பாரம்பரிய உடையில் " பத்மஸ்ரீ " விருது பெற்ற துளசி கௌடா!

சமூக ஆர்வலராக பணியாற்றி வரும் துளசி கௌடா தனது பத்மஸ்ரீ விருதினை பாரம்பரிய உடையில், காலில் கூட செருப்பு அணியாமல் மிக இயல்பான முறையில் பெற்றுக்கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


கர்நாடகாவை சேர்ந்தவர் துளசி கௌடா இவர் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். இவருக்கு 2 வயது இருக்கும்போதே தன் தந்தையை இழந்துவிட்டார். தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக துளசிக்கு 10 வயதிலையே திருமணமும் நடந்துவிட்டது. வீட்டின் கடுமையான சூழலால் தனது தாயுடன் இணைந்து நர்சரி (நாற்றுப்பண்ணை) பணிகளை செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். 

துளசி கௌடா நர்சரியில் பணியாற்றி வந்த காரணத்தினால் இயல்பாகவே அவருக்கு மரக்கன்றுகளை நடுவதில் மிகுந்த ஆர்வம் எழுந்துள்ளது. இதனால் தனது 12 வயதிலிருந்தே தன்னை முழுமையாக மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபடுத்திக்கொண்டார். இப்பொழுது அவருக்கு 72 வயதாகிவிட்டது, இது வரையிலும் துளசி கௌடா சுமார் 30- ஆயிரம் மரக்கன்றுகளுக்கும் மேல் நட்டியுள்ளார்.


தனது விடாமுயற்சியால் துளசி கௌடா தன் வாழ்க்கையில் 60 வருடங்களை அற்பணித்து தனி ஒரு பெண்ணாக நின்று மிகப்பெரிய காட்டையே உருவாக்கியுள்ளார். மரங்களை நடுவதில் அளவில்லாத நாட்டம் கொண்டதால் பல பாரம்பரிய மரக்கன்றுகளை தான் பிறந்த கர்நாடகாவில் நட்டுள்ளார். இது மட்டும் அல்லாது வன ஊழியர்களுடன் இணைந்து பல வகையான மரங்களை இம்மண்ணில் ஊன்றியுள்ளார். இவருடைய தன்னலமற்ற சேவையை நினைத்து அரசாங்கம் இவருக்கு நிரந்தரமான பணியை வழங்கியுள்ளது.


பலமுறை காடுகள் அழிக்கப்படும் பொழுது தனது குரலை வலுவாக பதிவு செய்துள்ளார் துளசி கௌடா. மரம் மட்டும் நாடாமல் மிகவும் அரிதான மற்றும் பழமையான மரங்களின் விதைகளையும் சேகரித்து வைத்துள்ளார். இதனால் பலரும் இவரை " Encyclopedia of Forest " என்று செல்லமாக அழைத்துவருகின்றனர். தனி ஒரு பெண்மணியாக நின்று காட்டிற்கும், நாட்டிற்கும் செய்த நலனை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு இவருக்கு நாட்டின் உயரிய விருதான " பத்மஸ்ரீ " விருதினை அறிவித்துள்ளது.


நவம்பர் 8- ஆம் தேதி தலைநகர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. துளசி தன் விருதினை பெறுவதற்கு தன் பாரம்பரிய உடையணிந்து காலில் செருப்பு கூட அணியாமல் சென்றிருந்தார். 

விழா மேடையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி அவர்களுக்கும் மத்திய அமைச்சர் அமிட்ஷா அவர்களுக்கும் தனது வணக்கத்தினை தெரிவித்துக்கொண்டார். பின்பு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவந்திடம் பத்மஸ்ரீ விருதினை பெற்றுக்கொண்டார். இவரின் சாதனையையும், இயல்பான தோற்றத்தையும் பலரும் பாராட்டி வருகின்றனர். 


நன்மை செய்வதற்கு நல்ல குனம் மட்டும் இருந்தால் போதும் நாம் நினைத்ததை நிறைவேற்றலாம் என்பதை 72 வயதான துளசி கௌடா உணர்த்தியுள்ளார்.

 இது போன்ற சுவாரஷ்யமான தகவல்களுக்கு எங்களுடைய இணைய தளத்தை தினமும் அணுகுங்கள். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை தெரிவிக்க ecoimbatore என்ற Facebook பக்த்தை விசிட் செய்யுங்கள் நன்றி.

இந்த தகவல்களையும் படிக்க மறந்தாராதீங்க..

https://bit.ly/3n43fIo

https://bit.ly/2YAFoGW

#Tulsi Gowda | Viral Pic: Padma Shri Winner | Who is Padma Shri awardee Tulsi Gowda? |  tulasi gowda biography | padma shri award 2021 | துளசி கௌடா | Encyclopedia of Forest thulasi gowda


Related Videos