தமிழகத்திற்கு ஓர் எச்சரிக்கை..!
சென்னைக்கும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் பெரும் மழைக்கான ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் தங்களுக்கு வரும் ஆபத்திலிருந்து தற்காத்து கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.
2015-ஆம் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வரலாறு காணாத பாதிப்பிலிருந்து சென்னை மக்கள் இன்னும் மனதளவில் மீளாத நிலையில், மீண்டும் இந்த எச்சரிக்கை மிகுந்த பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அது போன்ற மழையை சென்னை அதற்கு முன்பு பார்த்தது இல்லை. இந்நிலையில் தற்பொழுது 10.செ.மீ வரை சென்னையில் மழை பதிவாகியுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற 4மாவட்டங்களுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு மிகவும் பலத்த மழை பெய்யும் என்று ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
வெல்ல பாதிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று முன் அனுபவம் இருந்ததால் இந்த மழைக்கு மக்கள் தங்களுக்கு தேவையான அணைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர். மின்இணைப்பு துண்டிப்பு மற்றும் கடைகள் மூடப்படும் அபாயம் இருப்பதால் மக்கள் மெழுகுவர்த்தி, டார்ச் லைட்ஸ், பால் பாக்கெட்டுகள், காய்கறிகள், சமையல் எரிவாயு போன்ற மிக அத்தியாவசியமான பொருட்களை வாங்கி வருகின்றனர். இதே போன்று அரசும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்களையும், தன் ஆர்வலர்களையும் மீட்புப் பணிக்காக குவித்துள்ளனர். மேலும் தன் ஆர்வலர்கள் வருகை தந்து மீட்புக்குழுவில் இணைய வேண்டும் என்றும் அரசு கோரிக்கை விடுத்துள்ளது
இவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் கட்டுப்பாடு ஓயவில்லை. இதற்கு காரணம் மழை நீரை உறுஞ்சி நிலத்தடி நீராக மாற்ற தேவையான மண்ணும் இல்லை, இடமும் இல்லை என்பதுதான் எதார்த்தம். என்னதான் வெள்ளம் வந்தாலும் குடிக்க நீர் இல்லாமல் பாலைவனம் ஆகும் நிலைமையில் தான் நாம் உள்ளோம் என்றும் இதற்கு காரணம் மக்கள் தான் என்றும் நீரியியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இந்த மழை பாதிப்பில் நம் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று இறைவனை பிராத்திப்போம்.
இது போன்ற செய்திகளுக்கு www.cinema.sebosa.in - ஐ கிளிக் செய்யவும் உங்களளுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள் நன்றி.