10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1250 உதவித்தொகை
நடப்பு கல்வியாண்டில் 2021-2022 பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வை அரசுத் தேர்வுகள் இயக்கம் நடத்த திட்டமிட்டு அதற்கான தேதி மற்றும் விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளது.
அரசின் அறிவிப்பு:
இந்த திறனாய்வு தேர்வு குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நடக்கின்ற 2021-2022 இந்த கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் திறனாய்வுத் தேர்வில் கலந்துகொண்டு இந்த ஊக்கத்தொகையை பெற உடனே விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உதவி தொகை விவரங்கள்:
இந்த தேர்வில் வெற்றி பெரும் அணைத்து மாணவர்களுக்கும் அவர்களது முதுகலை படிப்பு முடியும் வரை அரசு இந்த ஊக்கத்தொகையை வழங்குகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் வரை மாதம் ரூ.1250 வழங்கப்படும்.மேலும் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பிற்காக மாதம் ரூ.2000 வீதம் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
மேலும் முனைவர் படிப்பிக்கும் பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கீழேயுள்ள இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும் : http://www.dge.tn.gov.in/
மேற்கண்ட Link மூலமாக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பிழையில்லாமல் பூர்த்தி செய்து அந்த விண்ணப்பத்துடன் ரூ.50 விண்ணப்ப தொகையை சேர்த்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.11.2021
மேலும் விவரங்களைப் பெற:
https://apply1.tndge.org/dge-notification/NTS
https://tnegadge.s3.amazonaws.com/notification/NTS/1635578244.pdf
https://tnegadge.s3.amazonaws.com/notification/NTS/1635578003.pdf
Tags: National Talent Search Exam - NCERT | National Talent Search Examination - NTSE | NTSE 2022 Exam - Date |ntse exam 2021-22 registration |ntse exam application form 2021 |government scholarship |www.cinema.sebosa.in|latest government jobs|10th scholarship|12th scholarshiphip|12th scholarship.