தீபாவளியன்று திரையரங்குகள் இயங்க தடை.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாகவே கொரோனா முதல் அலை காரணமாக, திரையரங்குகள் சரி வர இயங்கவில்லை.
ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து இருப்பதால் மீண்டும் திரையரங்குகள், கேளிக்கை பூங்காக்கள், மால்கள் உள்ளிட்டவை பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பின் திரையரங்கில் வெளியான, புதிய திரைப்படங்கள் அனைத்தும் பெரிய வசூலில் செய்து திரையரங்க உரிமையாளர்களை மகிழ்வித்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகும் அண்ணாத்த திரைப்படம் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், திரையரங்கில் தீபவளியன்று படம் பார்க்க ஒரே நேரத்தில் அதிகமானோர் கூடினால் கொரோனா மீண்டும் பரவ அதிக வாய்ப்புள்ளதாக கூறி, வருகின்ற நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு தேதிகளில் திரையரங்குகள் இயங்க தடைவிதிக்க வேண்டும் என மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு திரையுலகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் மதுரை உயர் நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.