ஒரு கருப்பு குழந்தையின் மனதை உருக்கும் கதை...|Motivational Story in Tamil.

    பக்கத்து ஊர்ல ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தாங்க அம்மா பெயர்- சித்ரா,அப்பா பெயர் - சந்துரு.இவங்களுக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடம் ஆகி விட்டது ஆனாலும் அவங்களுக்கு குழந்தைகள் இல்லை.இதனால மிகவும் கவலைல அந்த கணவன் மனைவி வாழ்ந்து வராங்க. குழந்தை இல்லை என்று கவலை பட்ட சித்ரா கணவரிடம் தினமும் அதை சொல்லி வருத்தப்பட்டாள். இதற்கு என்னதான் முடிவுனு சொல்லி சித்ராவோட  கணவர் கோவிலுக்கு போகலாம் நம்ம குறைய கடவுளிடம் முறையிடலாம்னு சொல்லி கோவிலுக்கு போறாங்க.


     கோவிலுக்கு போய் வேண்டிகொண்டு இருவரும் வீட்டுக்கு வந்தனர். சித்ராவும்,சந்துருவும் சாப்பிட்டு கொண்டு இருந்தாங்க அப்போத சித்ரா திடீருன்னு வாந்தி எடுத்தாள். சந்துரு என்ன ஆச்சுனு  கேட்டார் அதுக்கு சித்ரா ஓன்னும் இல்லை எதோ மாதிரி இருக்குனு சொல்லிருக்கா. சரி எதுக்கும் வா மருத்துவமனைக்கு போகலாம்னு சந்துரு சித்ராவை கூப்பிட்டுட்டு போறாரு. மருத்துவமனையில டாக்டர் உங்க மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்று சொன்னதும் சந்துரு மிகவும் மகிழ்ச்சியாக வீட்டுக்கு கூட்டிட்டு போறாரு. சித்ராவிக்கு குழந்தையும் நல்லபடியா பெண் குழந்தை பிறக்குது அந்த குழந்தை கருப்பாக பிறந்திருக்குனு சித்ராவிக்கு கவலை.


   ஆனால் சந்துருவிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கு சித்ரா என்ன இது இப்படி கருப்பாக பிறந்துவிட்டது என்று கவலைப்பட்டால் பெண் குழந்தை பெயர் தீபா இவளை நான் எப்படி வெளியில கூப்பிட்டு போறதுனும்?வெளியில கூப்பிட்டு போனால் கிண்டல் பண்ணுவாங்க என்று கூச்சப்பட்டால் சித்ரா. ஓரு நாள் சித்ரா சமையல் செய்து கொண்டு இருந்தால் அப்போது அவள் கையில் தீ காயம் பட்டு தோல் வெள்ளை ஆகி விட்டது.உடனே சித்ராவிக்கு ஒரு யோசனை தீபா  உடம்பு முழுவதும் தீ  பட்டால் அவளும் வெள்ளை ஆகி விடுவாள் என்று தீபாவை கூப்பிட்டால். சந்துரு வேலைக்கு போய் விட்டு வீட்டுக்கு வந்தான் சித்ரா பெரிய குச்சியை எடுத்து தீயில் சூடுபண்ணி தீபாவை சூடு வைப்பதற்கு போனால் அப்போது சந்துரு என்ன பன்ற உனக்கு அறிவு இருக்குதா ?இல்லையா? என்று மிகுந்த கோபத்தோட கேட்டான்.அதற்கு சித்ரா நான் சமையல் பண்ணும்போது என் கையில் தீ காயம் பட்டு தோல் வெள்ளை ஆகி விட்டது.அதுபோல தீபாக்கும் உடம்பு முழுவதும் தீயை பட வைத்தால் நம் பிள்ளையும் வெள்ளை ஆகி விடுவாள்னு சொல்லிருக்கா. சந்துரு நீ ஒரு முட்டாள்னு அந்த தீ இருக்கற குச்சியை வேகமா பிடிங்கி எருஞ்சுட்டான்.

    ஒருமுறை சித்ராவின் தோழிக்கு கல்யாணம் அதற்கு சித்ரா மட்டும் போனால் ஆனா பாவம்  தீபாவை வீட்டிலையே விட்டுட்டு போயிருக்கா. இதையெல்லாம் நெனச்சு சந்துருவிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நம்ம மகளை வெளியில கூட கூப்பிட்டு போக மாட்டடீரானு சந்ருக்கு மனம் ரொம்ப வேதனையா இருந்துச்சு.

     ஆனால் ஓரு நாள் சித்ரா தன் மகளை வெளியில கூட்டிட்டு போகலாம்னு முடிவு பண்ணி தீபா கிட்ட கிளம்பு நான் உன்னைய வெளிய கூட்டிட்டு போறான்னு சொல்லிருக்கா.இதைய கேட்டதும் தீபாவுக்கு பயங்கர சந்தோசம்.உடனே தீபா வேகமா கிளம்பிட்டா. சித்ரா மற்றும் தீபா ரெண்டு பேரும் வெளியில் போனாங்க.அங்க ஒரு இடத்தில தீபாவை உக்காரவைத்து விட்டு இங்கையே நீ உக்காந்திரு நான் கடைக்கு போய் மளிகை பொருட்கள் வாங்கி வந்தரேன்னு தீபாவிடம் சொல்லி விட்டு போனால் சித்ரா.தீபாவும் அங்கு உக்காந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால் சித்ரா பொருட்கள் எல்லாத்தையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போனால் சந்துரு ரொம்ப அதிர்ச்சியோட நீ மட்டும் வர எங்க தீபானு கேட்டான். ஐயோ நான் மறந்து அங்கையே விட்டுட்டு வந்துட்டேனு அழுதுட்டே சொல்லிருக்கா.


    தீபா இருக்கற இடத்துக்கு போன ஓரு பெரியவர் இங்கு ஏன் பாப்பா உக்காந்துருக்க என்று கேட்டார். அதுக்கு தீபா என்னோட அம்மா கடைக்கு போயிட்டு  வந்தரேணு சொல்லி இங்க என்னைய விட்டு போனாங்க அதான் இங்க உக்காந்திருக்கனு சொன்னா. பெரியவர் நான் உன் வீட்டுல கொண்டுபோய் விடறனு சொல்லி தீபாவை கூட்டிட்டு போறாரு.

    தீபா வீட்டுக்கு போய் அந்த பெரியவர் சித்ராவை பார்த்து என்ன உங்க மகளை ரோட்டில விட்டுட்டு வந்துட்டிங்கனு கேட்டிருக்காரு உடனே தீபா நான் கருப்பாக இருப்பதனால் தான் என்னைய ரோட்ல நான் வேண்டானு விட்டுட்டு வந்துட்டீங்கனு பரிதாபமா கேட்டாள்.உடனே மகளை காணாம்ங்கற கவலைல இருந்த சித்ரா தான் செய்த கேவலமான செயலை எண்ணி தலை குனிந்து நின்றால்.அந்த பெரியவர் என் மகனுக்கு குழந்தை இல்லை அதனால என் மகனுக்கு உங்க மகளை தத்து குடுக்கறீர்களா? என்று கேட்டார்.எனக்கு கருப்பு வெள்ளை முக்கியம் இல்லை என் மகனுக்கு குழந்தை இருந்தா போதும் நாங்க அவளை பொக்கிஷம் மாதிரி பத்துக்கறோம்னு கேட்டார். சித்ரா நான் என் மகளை யாருக்கும் குடுக்க மாட்டேன் நான் எவ்வளவு பெரிய கஷ்டத்தை என் பிள்ளைக்கு குடுத்துருக்கேன்னு புருஞ்சுட்டேன் இனிமேல் நான் அவளை நல்ல படியா பாத்துக்குவேன் எனக்கு அவள் கருப்பாக இருப்பதை பற்றி கவலை இல்லை.அவளோட நிறத்துல ஒரு குறையும் இல்ல என்னோட மனசுல தான் குறைனு சொல்லி தீபாவை வாரி எடுத்துட்டா.


    தீபாவை போன்ற பிள்ளைகள் இன்னும் சித்ரா மாதிரியான பெத்தவங்களால ஒதுக்கப்படறாங்க.இந்த கதையில இருந்து குழந்தைகள் கருப்போ இல்ல வெள்ளையோ தன் குழந்தைகளை அன்பாக பாத்துக்கொள்ள வேண்டும்.மனிதர்களுக்கு கருப்பு வெள்ளை முக்கியம் இல்ல நல்ல குணங்கள் தான் முக்கியம்னு இப்படிப்பட்ட பெற்றோர்கள் புருஞ்சு நடந்தா.அந்த குழந்தைகள் மிகப்பெரிய வெற்றியாளர்களா வருவாங்க.கருப்பா பிறந்தது அவங்க தவறு கிடையாது.

உங்க நண்பர்கள் அல்லது உங்க குடும்ப உறுப்பினர்கள் யாரது அவங்க கலர் - ஐ நெனச்சு வறுத்த பட்டுட்டு இருந்தாங்கனா கண்டீப்பா இந்த கதையை அவங்களுக்கு ஷேர் பண்ணுங்க. இது போன்ற Motivational கதைகளுக்கு www.cinema.sebosa.in இணையதளத்தை விசிட் பண்ணுங்க நன்றி.  


Related Videos