கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் 46வயசுல ஹார்ட்-அட்டாக் வந்து இறந்து போய்ட்டாரு இதற்கு உண்மையான காரணம் என்ன???

   கன்னட சூப்பர் ஸ்டார்-ஆன புனீத் ராஜ்குமார் 46வயதில் (17/03/1975 -2 9/10/2021) இறந்து போனதுக்கு முக்கிய காரணம் மாரடைப்பு.இவர் நல்ல உடற்பயிச்சி செய்பவர்.தன்னோட உடல் ஆரோக்கியத்திற்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பவர்.இவரை போல 56வயசுல விவேக் அவர்கள் மாரடைப்பால இறந்து போனாரு இவரும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிப்பவர் தான். இது போன்று நிறைய பேர் திடீர்னு மாரடைப்பால இறக்கறதுக்கு முக்கிய காரணம் மனதோடு ஆரோக்கியத்தை கவனிக்காம விடறது தான்.    


மற்ற நாடுகளை ஒப்பிடும் போது நம்ம இந்தியால குறிப்பா ஆண்கள் அதிகமா மாரடைப்பால இறந்து போறாங்க.நம்ம எல்லாரும் பொதுவா மாரடைப்பு வயதான காலத்துல தான் வரும்னு நம்ம விருப்பப்படி உடல் நலத்துல அக்கறை இல்லாம கண்டதையும் சாப்பிட்டுட்டு,கண்ட நேரத்துலையும் தூங்கிட்டு அதுல இருக்கற ஆபத்தை உணராம வாழ்ந்திட்டு இருக்கிறோம்.ஆனா அது முற்றிலும் தவறு நம்ம நாட்டுல 40வயதுக்கும் கீழான ஆண்களுக்கு தான் 50%மாரடைப்பு வந்து இறந்து போறாங்க.


   இந்தியாவில 2013-ஆம் ஆண்டு நடத்துன ஆராய்ச்சியில ஒவ்வொரு நாளும் சுமார் 900இந்தியர்கள் மாரடைப்பால இறந்து போய்ட்டு இருக்காங்க.பொதுவாவே இந்தியர்களுக்கு பிறப்புலையே இதயம் கொஞ்சம் பலவீனமாக தான் இருக்குமாம்.இதற்கு முக்கிய காரணம் நிறைய மாக்கள் காலை உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது,இரவு நேரம் வேலை பார்ப்பது,ஒழுங்கு முறை இல்லாத உணவுப் பழக்கம்,சரியான அளவு தூக்கம் இன்மை,அதிக அளவிலான தேவையற்ற சிந்தனைகள்,பாஸ்ட் புட் உணவுகளை தினமும் சாப்பிடுவது,உடற்பயிச்சி செய்யாமல் இருப்பது இது மாதிரியான காரங்கள் தான் மாரடைப்பு வருவதற்கு 90% காரணங்கள்.


   மாரடைப்பு வருவதற்கு 2வாரங்களுக்கு முன்பாகவே அதோட அறிகுறிகள் தெரியும்.அதாவது உங்களுக்கு தீடீர் கால் வீக்கம்,முக வீக்கம்,மயக்கம்,மூச்சுத்திணறல்,உடல் எடை அதிகமா இருப்பது போன்ற உணர்வு இதெல்லாம் முக்கியமான அறிகுறிகள் இதோட தோல்பட்டை வலி மற்றும் நெஞ்சு வலி இருந்தால் கண்டீப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.மாரடைப்பு வர இந்த காரணங்களே போதும் வயது தேவை இல்லை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம் என்பதை நாம் புரிந்து கொண்டு நல்ல வழக்கை முறையை கடைபிடித்தால் நமக்கும் நமக்கு பின்னால் வரும் சந்ததிக்கும் இந்த மாரடைப்பில் இருந்து தப்பிக்க வழிபிறக்கும்.

  மேலும் இது போன்ற தகவல்களுக்கு https://cinema.sebosa.in/ வெப்சைட்-ஐ விசிட் பண்ணுங்க.இந்த தகவலை உங்க Friends & Family க்கு ஷேர் பண்ணுங்க நன்றி.

Related Videos