நிஜ வாழ்க்கையில் நடந்த சிறப்பான திருட்டு சம்பவங்கள் வாங்க பாக்கலாம்....
அர்ஜென்டினால இருக்கற ஒரு ஏர்போர்ட்-க்கு 22வயதான ஒரு வாலிபர் போயிருக்காரு அவர் நடந்து போகும் போது எதோ ஒரு வித்யாசம் தெருஞ்சுருக்கு இதனால சந்தேகப்பட்ட ஆஃபீஸ்ர்ஸ்(airport securities)அவர சோதனை பன்னிருக்காங்க.எல்லாருக்கும் 6packs தான இருக்கும். ஆனா அவரோட வயித்துல 12packs இருந்து இருக்கு அது என்னனா ஷூ-ஓட சாக்ஸ்-அ ஒரு டேப் வச்சு கட்டி 12 சாக்ஸ்கள தன்னோட வயித்த சுத்தியும் கட்டி வச்சுருந்திருக்கறாரு.அதைய தொட்டு பார்த்த என்னமோ அசைஞ்சுருக்கு உடனே அதிகாரிங்க விலங்கு பாதுகாப்பு டீம்க்கு(animal rescue team) தகவல் சொல்லி வரவலுச்சுருக்காங்க.அவங்க வந்து அதைய தெறந்து பார்த்தா...!!!அந்த packs முழுவதும் பாம்புகள் இருந்திருக்கு.அதுமட்டும் இல்லாம அவரோட கால்ல சின்ன சின்ன டப்பால பல்லிகள அடைச்சு வச்சிருக்காரு.இதுல என்ன உச்சகட்டம்னா அது எல்லாமே உயிரோட இருந்து இருக்கு!!ஒரு வேல இவர் தான் foreign snake babu போல...
2020-ஆம் ஆண்டு கனடா-ல ஒரு கர்ப்பிணி (pregnancy lady) ஏர்போர்ட்-லைன்ல மெதுவா போயிட்டு இருந்துருக்காங்க அனா அவங்க ஒரு பக்கம் நடந்தா அவங்க வயிறு ஒரு பக்கம் போயிருக்கு இதனால சந்தேகபட்ட ஏர்போர்ட் பாதுகாப்பு அதிகாரிங்க அவங்கள பெண் அதிகாரிய வச்சு செக் பன்னிருக்காங்க.அவங்க வயிறை தட்டி பாக்கும் போது கல்லு மாதிரி இருந்திருக்கு.என்னடா இதுனு செக் பன்னா ஒரு கர்ப்பிணி வயித்துல குழந்தை தான இருக்கும் இவங்க வயித்துல 2கோடி மதிப்புள்ள போதைப்பொருள் இருந்திருக்கு.கர்பிணியா வந்த இவங்களுக்கு ஏர்போர்ட் ஆஃபீசர்ஸ் டெலிவரி பண்ணி அனுப்பிட்டாங்க...!!!
19-வயதான மரியா-ங்கற பொண்ணுக்கு கல்யாணமான கொஞ்ச நாட்களிலேயே அவரோட கணவர் எதோ தப்பு பண்ணிட்டார்னு போலீஸ் அவர கைது பண்ணி சிறையில் அடைக்கறாங்க.ஒரு மாசத்துக்கு ஒரு தடவை அவங்க மனைவிக்கு அவங்களோட கணவரை பாக்க அனுமதி கொடுத்திருக்காங்க.அதுனால ஒரு முறை கணவரை பாக்க மரியா போலீஸ் ஸ்டேஷன்க்கு பெரிய சூட்கேஸோட போயிருக்காங்க போலீஸ்-க்கு சந்தேகம் வந்து சூட்கேஸ திறந்து பாத்துருக்காங்க அதுல தலையணை ,போர்வை எல்லாம் இருந்திருக்கு இதுக்கெல்லாம் அந்த ஜெயில்ல அனுமதி இருக்கு அதனால அந்த அதிகாரிகளும் விட்டுட்டாங்க.அவங்க சிறையில திரும்பி வரும் போதும் அந்த சூட்கேஸ் வெயிட்டா இருந்து இருக்கு மறுபடியும் இவங்க ஜெயில்ல இருந்து ஏதாவது எடுத்துட்டு போறாங்களோனு சந்தேகம் வந்து போலீஸ் செக் பன்னிருக்காங்க அவங்க அப்படி ஜெயிலோட எந்த உடமைகளையும் எடுத்துட்டு போகல அவங்களுக்கு சொந்தமான அவரோட கணவறையே சூட்கேஸ்ல வச்சு எடுத்துட்டு போக முயற்சி செஞ்சுருக்காங்க அவங்க கணவர் வெறும் ஷார்ட்ஸ் (ஜட்டி) மட்டும் தான் போட்டிருந்தாரமா ஏன் டிரஸ் போடலைனு கேட்டா வெயிட்ட கொறைக்கறதுக்காமா!!!!
ஒருவாட்டி ரஷ்யன் ஆஃபீசர்ஸ் வர வண்டிகளை எல்லாம் சோதனை நடத்திட்டு இருக்கும் போது மரம் ஏத்திட்டு ஒரு வண்டி வந்திருக்கு அதையும் சோதனை பன்னிருக்காங்க ஆன எதும் கிடைக்கல,சரி போக சொல்லீறலானு நினைக்கும் போது சும்மா ஒரு அதிகாரி ஒரு மரத்துண்ட தொட்டுருக்காரு உடனே அந்த மரம் கீழ உருண்டு போயிருக்கு என்னடா!இவ்வளவு எடையுள்ள இந்த மரம் தொட்டதும் எப்படி போச்சுன்னு அந்த மரத்த அறுத்து பாத்துருக்காங்க அப்ப அதுக்குள்ள ஓட்டை போட்டு ஒரு நூல் இருந்திருக்கு அதைய இழுத்து பாத்தா....ஒரு சிகரெட் அருவியே அதுல இருந்து கொட்டிருக்கு எல்லா மரத்தையும் cut பன்ணதுல சுமார் 25ஆயிரம் சிகரெட் கட்டுகள் இருந்திருக்கு.ட்ரில்லிங் மெஷின்ல ஓட்டை போட்டு உள்ளுக்குள்ள சிகரெட் பெட்டிகளை வச்சு வெளிய பாக்கறதுக்கு நிஜமான மரம் மாதிரி பக்காவா செஞ்ச இவங்க மண்ணடையில இருக்கற கொண்டைய மறந்துட்டையேங்கற மாதிரி வெயிட் வித்தியாசத்துல சிக்கிட்டாங்க நம்ம ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீனா போச்சே!!
துபாய் ஏர்போர்ட்ல ஒரு தடவை பத்து lux-சோப்புகளோட ஒருத்தர் வந்திருக்காரு சரி வெளிநாட்டுல இருந்து வரவங்க சோப்பு,சென்ட் எல்லாம் வாங்கிட்டு வரது சாதாரணமா விசியம் தானான்னு நெனச்சுருக்காங்க.ஆனா Lux சோப்பு சாதாரணமா பெட்டி கடைகளில கூட கிடைக்குமே எங்கையோ தப்பா இருக்குதேனு அதிகாரிங்க அந்த சோப்பை எல்லாம் அறுத்து பாத்திருக்காங்க பாத்தா சொக்க வைக்கும் சொக்க வைக்கும் ஜுவல்லரி சொக்கதங்கம் சொக்கதங்கம் ஜுவல்லரினு சுமார் 35000 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளா கொட்டிருக்கு.ஏயா சோப்பு தான் வாங்கன கொஞ்சம் காஸ்ட்லியா வாங்கிருந்தா தப்பிச்சுருப்ப இல்ல.இப்ப பாரு நீ சீப்பா(lux சோப்பு) போட்ட பிளான ஆஃபீசர்ஸ் சீப்ப(luxசோப்பு) வச்சே முடுச்சுட்டாங்க...
என்ன நண்பர்களே உங்களுக்கு இந்த ஸ்டோரீஸ் பிடுச்சுருக்கா அப்ப மறக்காம கமெண்ட் பண்ணுங்க உங்க நண்பர்கள் மற்றும் family-க்கு ஷேர் பண்ணுங்க.மேலும் இது போன்ற ஸ்டோரிஸ்க்கு இந்த லிங்க் மூலமா www.cinema.sebosa.in website-ஐ விசிட் பண்ணுங்க நன்றி.