என்னது செத்து போனவங்கள உயிரோட கொண்டு வர முடியுமா!!!??

         19-ஆம் நூற்றாண்டுகளில அமெரிக்காவில் கலிபோர்னியா மாவட்டத்துல 21-12-1903-ல ஒரு குழந்தை பொறக்குது அந்த குழந்தை தான் இந்த கதையின் நாயகர் Mr. Robert E. Cornish(ராபர்ட்-ஈ.கார்னிஷ்). இவருக்கு சின்ன வயசுல இருந்தே எதாவது மருத்துவத் துறையில சாதிக்கணும்னு ஒரு லட்சியத்தோடு படுச்சு பெரிய மருத்துவர் பட்டம் வாங்கறாரு.இவருக்கு சின்ன வயசுல இருந்தே யாரது ஒரு விஷயத்தை செய்யவே முடியாதுனு சொன்னா அதைய செஞ்சு பாக்கறதுல அவ்வளவு ஈடுபாடு இருக்குமாம்.

   அப்படி தான் இவருக்கு இறந்தவங்கள உயிரோட கொண்டு வரணும்ங்கற எண்ணம் வந்துருக்கு அதைய உடனே செயல்பாட்டுலையும் கொண்டு வராரு.அதுக்காக அவர் நிறைய ஆராய்ச்சிகளை நடத்தி கடைசியா ஒரு விசயத்தையும் கண்டு பிடிக்கறாரு.


    அதாவது ஒரு மனிதன் இறப்பதற்கு முக்கிய காரணம் அவங்களோட இரத்தம் உறைஞ்சு போறதுதான்னு கண்டு பிடிக்கறாரு.இப்ப நவீன காலத்தில இருக்கற எந்த உபகரனுனுமே அப்ப கிடையாது இருந்தாலும் அவரோட கண்டுபிடிப்பு எப்படி இருந்திருக்குனு பாருங்க.இதிலிருந்து ஒரு மனிதன் இறந்து போனதுக்கு அப்பறம் மீண்டும் உயிர்பெற வைக்கணும்னா உறைஞ்சு போய் நின்னு போன இரத்தத்தை மீண்டும் ஓட வைக்கணும்னு முழுசா நம்பிக்கை வச்சு அதுக்காக இவர் தியர் போர்டு அப்படிங்கற ஒரு பலகையை கண்டு பிடிக்கறாரு. இந்த போர்டுல இறந்தவங்கள கட்டி மேலையும் கீழையும் வேகமா ஆட்டும் போது அவங்க இரத்த ஓட்டத்தை மீண்டும் கொண்டு வர முடியும்னு நம்பறாரு.

    அதே மாற ஒரு இறந்தவரோட உடலை அந்த போர்டுல கட்டி வச்சு ஆராய்ச்சி பன்றாரு ஆனா அவரோட முயற்சி தோல்வியில முடியுது.ஆனாலும் உடைஞ்சு போகாம மேலும் ஆராய்ச்சியை தொடங்கறாரு அப்பறம் தான் அவருக்கு புரியுது இறந்து அதிக நாட்களானவங்கல உயிர்ப்பிக்க முடியாது.ஆனா இறந்து பொய் மூன்று நிமிடத்திக்குள்ள போன உயிர திருப்பிக் கொண்டுவர முடியும்னு கண்டு பிடிக்கறாரு.இப்போ இந்த ஆராய்ச்சிய மனிதர்கள வச்சு செய்யாம நாய்களை வச்சு செய்யறாரு அந்த ஆராய்ச்சிக்காக நிறைய நாய்கள் கொல்லப்படுது.இறுதியா ஒரு விதமான கெமிக்கல்ஸ்(chemicals)-ஐ அந்த நாய்களுக்கு கொடுத்து அந்த பலகையில கட்டி வச்சு ஆராய்ச்சி பன்றாரு அதுல அவருக்கு மிகப்பெரிய வெற்றியும் கிடைக்குது. 


   என்னதான் இதுனால அவருக்கு சந்தோசம் இருந்தாலும் இன்னொரு புறம் மனிதர்கள உயிர்ப்பிக்க முடியலைன்னு பெரிய வருத்தமும் இருக்குது.அதுக்காக 3நிமிசத்துல மனிதனோட உடல் எங்க கிடைக்கும்னு யோசிக்கறாரு அப்பதான் கோர்ட்-ல கேக்கலாம்ங்கற சிந்தனை வருது.அதனால கோர்ட்க்கும் போறாரு அங்க போய் தூக்கு தண்டனை கைதியோட உடல ஆராய்ச்சிக்காக கேக்கறாரு.ஆனா கோர்ட் தண்டனை குடுத்த கைதியை மீண்டும் உயிர்ப்பிச்சா அவங்களுக்கு மறுபடியும் தண்டனை குடுக்க முடியுமா அப்படியே அவங்கள விட்டா மறுபடியும் அதே மாதிரியான தப்பான செயல்களில ஈடுபடுவாங்கனு நிறைய கோணங்களில யோசிக்கறாங்க.அதுமட்டும் இல்லாம அவர் ஆராய்ச்சி நடத்தி உயிர்ப்பிச்ச இரண்டு நாய்களையும் கோர்ட்க்கு வரவழைக்கறாங்க. அந்த நாய்கள் பார்ப்பதற்கு மிகவும் சோர்வான நிலையில மோப்ப திறனை எல்லாம் இழந்த நிலையில முற்றிலும் வேற மாதிரியான உருவத்தில இருந்திருக்குது.


   இதைய பார்த்த கோர்ட் இயற்கைக்கு மாறான இத்தகைய ஆராய்ச்சிய செஞ்சா இப்ப வாழ்ந்துட்டு இருக்கற மக்களுக்கு மிகப் பெரிய ஆபத்த வரவழைக்கும்னு  நம்பறாங்க,அங்க வாழற மக்களும் பிறப்பும் , இறப்பும் நடந்தா தான் இந்த உலகம் நிலைக்கும்னும் அதனால இது போன்ற ஆராய்ச்சியால மக்கள் இனமே முற்றிலுமாக அழிந்து போகக்கூடும்னும் இந்த ஆராய்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கறாங்க.அதுனால கோர்ட் முற்றிலுமா இந்த ஆராய்ச்சிக்கு தடை விதிச்சுட்டாங்க.

    ராபர்ட்-உம் அவரோட இயல்பான வாழ்க்கைக்கு திரும்பீட்டாரு.இவர் பண்ணின இந்த ஆராய்ச்சி தான் ஆராய்ச்சி பட்டியல மிகப்பெரிய ஆராய்ச்சிங்கற இடத்த பிடுச்சிருக்கு.இவரோட இந்த ஆராய்ச்சி ஒரு படமாகவும் எடுத்திருக்காங்க அந்த படத்தோட பெயர் தான் Life Return.இவர் 1963-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

  என்ன நண்பர்களே உங்களுக்கு இந்த கதை பிடுச்சிருக்கா அப்ப கண்டிப்பா உங்க Friends & Family க்கு share பண்ணுங்க.மேலும் இதுபோன்ற தகவல்களுக்கு www.cinema.sebosa.in இணையதளத்தை visit பண்ணுங்க நன்றி.

Related Videos