21-கோடி வருட பழமையான கின்னஸில் இடம் பிடித்த ஒரு விலங்கின் பேய் கதை வாங்க பாக்கலாம்...

   அமெரிக்கா-வில் இருக்கற கோஸ்ட் ரான்ச்(Ghost Ranch) ங்கற ஒரு பாலைவனம் மாதிரியான தோற்றத்தைக் கொண்ட ஒரு இடம் இருக்குது.இந்த இடத்திற்கு பொதுவாகவே யாராவது  தனிமையா போனாலோ,இல்ல நாலு பேர் சேர்ந்து கூட்டமா போனாலோ அங்க எல்லாருமே தனிமையா எங்கையோ வேற்றுகிரகத்துல இருக்கற மாதிரி தான் இருக்கும்னு சொல்றாங்க.

   இப்படியானா இந்த இடத்துல விவரோன் ஹைதீனி (Vivaron Haydene ) என்ற பெயருடைய ஒரு விலங்கினம் இறந்து போய் பேயா(ghost)-ஆ வலம் வந்துட்டு அந்த பாலைவனத்திற்கு வர மக்களை எல்லாம் ரொம்ப பயப்படுத்திட்டு அங்கயே வலம் வந்துட்டு இருந்திருக்குது.இந்த விலங்கோட உருவம் இப்ப உலகத்துல வாழ்ந்துட்டு இருக்கற முதலை மற்றும் அழிந்து போன டைனோசர் உருவத்தையும் கலந்த மாதிரியான உடல் அமைப்புள்ள ஒரு உருவம்னு அந்த பாலைவனத்துக்கு போய் அதன் ஆவிய(ghost)பார்த்த மக்கள் சொல்றாங்க.


   1947-ஆம் ஆண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த இடத்தில ஆய்வு நடத்த முடிவு பண்றங்க.அங்க ஆய்வும் நடத்துறாங்க அப்ப அங்க வாழற மக்கள் எல்லாரும் அந்த நிபுணர்கள அங்க ஏற்கனவே ஒரு மிருகத்தோட பேய் பெரிய உருவத்தோட எங்களை ரொம்ப பயப்படுத்துது இதுல நீங்க ஏதாவதை தோண்டி இன்னும் ஆபத்தை உருவாக்கிறாதீங்கன்னு சொல்றாங்க.ஆனா அந்த நிபுணர்களுக்கு கொஞ்சம் கூட அதுல நம்பிக்கை அவங்க முற்றிலும் அதைய மறுத்து அறிவியில தான் முழுசா நம்பனாங்க.அதனால அவங்க அந்த இடத்துல ஒரு குழிய ஆராய்ச்சிக்காக தோன்றாங்க அப்ப தான் அந்த நிபுணர்களையே தூக்கி போடற மரியானா ஒரு சம்பவம் நடக்குது அதுதான் அந்த மக்கள் அங்க பேயா வலம் வருதுனு சொன்ன அந்த மிருகத்தோட எலும்புக்கூடு அந்த குழிக்குள்ள இருந்திருக்கு.


   அந்த மக்கள் பார்த்ததா சொன்ன உருவமும் அந்த குழிக்குள்ள இருந்த மிருகத்தோட எலும்புக்கூடும் ஒண்ணுதான் இத பார்த்த மக்கள் இன்னும் பயங்கரமான பயத்துக்குள்ள போறாங்க.அந்த நிபுணர்கள் அந்த எலும்புக்கூட்டை எடுத்துட்டு போய் ஆராய்ச்சி பண்றங்க அந்த மிருகம் சுமார் 21 கோடி வருடங்களுக்கு முன்னாள் வாழ்ந்து அழிஞ்சு போயிருக்குது.அந்த மிருகம் சுமார் 9அடி உயரமுடையதாம்.மேலும் இந்த விலங்கு இப்ப உலகத்திலுள்ள முதலையின் குடும்பத்தைச் சார்ந்த உயிரினம்னும் கண்டு பிடுச்சுருக்காங்க.இத கண்டு பிடுச்சவர் பேரையே விச்வரோன் ஹைதீனி(Vivaron Haydene)-னு அந்த மிருகத்திற்கு வச்சுட்டாங்க.

சுமார் 500வருடங்களாகவே அங்க வசித்து வந்த மக்கள் அப்போ இருந்து இந்த காலகட்டத்துலையும் அந்த மிருகம் பேயா வந்து பயங்கரமா பய படுத்துதுனும் மக்கள் சொல்றாங்க.இதுனாலையே மக்கள் அங்க போக மிகவும் பயப்படறாங்க.இந்த பேய்தான் உலக அதியசம்  புத்தகத்துல(Guinness World Records) இடம் பிடுச்ச பேய்.இந்த பேய் இன்னும் அங்க தான் வலம் வருதூணும் நம்பப்படுது.

   என்ன நண்பர்களே உங்களுக்கு இந்த கதை ரொம்ப பிடுச்சிருக்கா பிடுச்சிருந்தா உங்க நண்பர்களுக்கும் குடும்பத்திற்கும் மறக்காம share பண்ணுங்க மேலும் இதே போன்ற சுவாரிசியமான தகவல்களுக்கு www.cinema.sebosa.in website-ஐ visit பண்ணுங்க நன்றி.

Related Videos