இதையத்தோட எடை 180கிலோவா ஆ ஆ ஆ !!!!

கடல் வாழ் உயிரினங்களில் ஒன்று நீலத் திமிங்கலம் இது தான் உலகிலேயே மிகப் பெரிய விலங்கு. இது ஒரு பாலூட்டி ஆகும். இதன் நீளம் சுமார் 80 அடி முதல் 100 அடி வரை இருக்கும்.இதன் எடை 150 டன் அளவில் இருக்கும். இது வரை கண்டுபிடிக்கப்பட்ட பெரிய திமிங்கலத்தின் எடை 175 டன் ஆகும் . இதயத்தின் எடை சுமார் 185கிலோ இருக்கும்.

மிகப் பெரிய சப்தத்தை ஏற்படுத்தக் கூடியது.இதனுடைய இதயம் துடிக்கும் சத்தத்தை  நம்மால் 3கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் கேட்க முடியும்.நீலத் திமிங்கலம் ஒரு தடவை ஒரு குட்டி மட்டுமே ஈனும். பிறக்கும் போதே, அந்தக் குட்டி இரண்டு டன் எடை இருக்கும். வருடா வருடம் 91 கிலோ எடை கூடிக்கொண்டே இருக்கும். இதன் குட்டி, பிறந்ததில் இருந்து முதல் ஏழு மாதங்கள் வரை நாள் ஒன்றுக்கு சுமார் 400 லிட்டர் பாலைக் குடிக்கும். 200 டன் எடை வளரும். நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் கிலோ காலரி சக்தி இதற்குத் தேவைப்படும்.

நீலத்திமிங்கலம் ஒரு நாளைக்கு 3500 கிலோ வரை உணவு உட்கொள்கிறது.இதன் இதயம் ஒரு யானையை விடவும் மிக பெரியதாக இருக்கும்.'க்ரில்’ என்ற கடல்வாழ் உயிரினங்களை இவை விரும்பிச் சாப்பிடும். முதிர்ச்சி அடைந்த திமிங்கிலங்கள், நாள் ஒன்றுக்கு நான்கு முதல் எட்டு டன் க்ரில்களை உட்கொள்ளும். இவற்றுக்கு, இரைகளைப் பிடிக்க ஆச்சரியமான அமைப்புகள் இருக்கின்றன. கடலில் உள்ள சின்னச் சின்ன இரைகளைக்கூட இவற்றின் வாயில் இருக்கும் பலீன் என்னும் சல்லடை போன்ற அமைப்பினால் வடிகட்டிப் பிடித்துவிடும்.இதன் நுரையீரல், 5,000 லிட்டர் தண்ணீர் கொள்ளும் அளவுக்குப் பெரியது. இதயம், 600 கிலோ எடை இருக்கும். அதாவது, ஒரு சிறிய கார் அளவுக்கு இருக்கும். இதன் ரத்தக் குழாய்கள் ஒரு மனிதன் நீந்திச் செல்லும் அளவு இருக்கும். இதன் நாக்கு மட்டும் மூன்று டன் எடை இருக்கும். நீரை உறிஞ்சி, ஊதும்போது, 30 அடி தூரம் பீய்ச்சி அடிக்கும்.

இவற்றின் கொழுப்புக்காகவும் எண்ணெய்க்காகவும் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ இந்த இனமே அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது.


Related Videos