சிலந்தியாக பிரதிபலித்த பயம்!!!

ஒரு ஜென் மாணவன் ஒருவன் தினமும் தன் அறையில் தியானம் செய்வான். அப்போது அந்த அறையின் சுவரில் சிலந்தி ஒன்று இருந்து வந்தது. அது நாளுக்கு நாள் பெரிதாக வளர்ந்து வந்தது. அதை பார்க்க பார்க்க அவனுக்கு பெரும் பயம் உண்டாகியது. எனவே அவன் தனது பயத்தை குறித்து தனது குருவிடம் முறையிட எண்ணினான்.

ஆகவே அவன் குருவை சந்தித்து, நடந்ததை சொல்லி, அந்த சிலந்தியை கொல்ல முடிவெடுத்துள்ளதாக கூறினான். மேலும் அதை கொல்வதற்கு போடப்பட்டுள்ள திட்டமான "தியானம் செய்யும் போது ஒரு கத்தியை தொடையில் வைத்து கொள்ள போவதாகவும், அந்த சிலந்தி மறுமுறை கண் முன் தோன்றினால் அதை நறுக்க போகிறேன்" என்று கூறினான். அதற்கு குரு அவனுடைய யோசனைக்கு எதிராக ஒரு அறிவுரை கூறினார். அதாவது "நீ தியானம் செய்ய போகும் பொழுது, சுண்ணக்கட்டி ஒரு துண்டு கொண்டு செல். அதனை அந்த சிலந்தி உன் கண்ணுக்கு தென்படும் பொழுது நீ உன் வயிற்றில் "x" என்ற குறியீட்டை எழுது" என்றார். மாணவனும் குருவின் அறிவுரையின் படி தியானம் செய்ய போனான். சிலந்தியும் அவன் கண்ணுக்கு தென்பட்டது. அதைக் கண்டதும் அதைக் கொல்லாமல், அதற்கு பதிலாக குருவின் ஆலோசனை படி, அவன் தன் வயிற்றில் "x" என எழுதினான். சில நாட்களுக்கு பிறகு குருவிடம் சென்ற போது, குரு அவனது சட்டையை கழற்ற சொன்னார்.

அந்த மாணவன் தனது வயிற்றில் "x" என்ற குறியீடு இருந்தது. பின் குரு அவனிடம், "அந்த "x" குறியானது சிலந்தி வலையின் அமைப்புடையது. அது உன் தியானத்தின் போது மனதில் தோன்றிய பயத்தை பிரதிபலிக்கிறது. ஆகவே எந்த வேலை செய்தாலும் எந்த பயமுமின்றி தைரியத்துடன் செய்ய வேண்டும். மேலும் எந்த ஒரு உயிரினத்தையும் கொள்வது தவறு, நீ எழுதியுள்ள அந்த 'x' குறியீடும் அதை தான் உணர்த்துகிறது' என்று கூறினார்.

Related Videos