கசகசா பாயசம்

*கசகசா உணவில் சேர்த்துக் கொள்வது மிக நல்லது.இதை பேக்கிங் மற்றும் சாலட் செய்ய பயன்படுத்தபடுகிறது.இதில் இரும்புசத்து,நார்சத்து,பாஸ்பரஸ்,Thiamine,Riboflavin,Vitamin B,Omega -3 இருக்கிறது.

*ஒரு டீஸ்பூன் கசகசாவில் 13கிராம் கலோரி இருக்கிறது. டயட்டில் இருப்பவர்கள் உணவில் முந்திரிக்கு பதில் கசகசா சேர்த்து க்ரேவி செய்யலாம்.

*க்ரேவி கெட்டியாக வருவதற்க்கு 1 டேபிள்ஸ்பூன் அளவு சேர்த்தால் போதும்.இதில் கறுப்பு மற்றும் வெள்ளை என இருவகை இருக்கிறது.

*கறுப்பு கசகசா பேக்கிங் மற்றும் சாலட்களுக்கும்,வெள்ளை கசகசா சமையலுக்கும் பயன்படுத்தபடுகிறது.

*இதில் அதிகளவு  கால்சியம் இருப்பதால் எலும்புக்கும்,பற்களுக்கும் மிக நல்லது.

*இதில் அதிகளவு Morphine   இருப்பதால் கர்ப்பகாலத்தில் கசகசா சாப்பிடுவதை தவிர்க்கவும்.போதை பொருட்கள் செய்ய பயன்படுத்துவதால் இது சிலநாடுகளில் தடைசெய்யபட்டுள்ளது.

*இதன் எண்ணெயிலிருந்து சோப்பு மற்றும் வார்னிஷ் தயாரிக்கபடுகிறது.

அதிகளவு நார்சத்து இருப்பதால் இரத்த அழுத்தம்,டயாபட்டீஸ்க்கு மிக நல்லது.இதயநோய் வராமல் தடுக்கும் தன்மையுள்ளது.

*இதில் Linoleic Acid இருப்பதால் இதன் எண்ணெய் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

கசகசா பாயாசம் கர்நாடாகவின் பிரபலமான பாயாசம்.இவ்வளவு நன்மைகள் இருக்கும் கசகசாவில் இங்கே பார்த்து நான் செய்த பாயாசம்

தேவையான பொருட்கள்:

கசகசா - 2 டேபிள்ஸ்பூன்

ஒட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்

துருவிய தேங்காய் - 1/2 கப்

பால் - 3 கப்

சர்க்கரை = 5 - 6  டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*கசகசாவை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வருத்து ஆறவைக்கவும்.

*ஆறியதும் இதனுடன், துருவிய தேங்காய்+ஒட்ஸ் மற்றும்  சிறிது பால் சேர்த்து நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் மீதமுள்ள பாலை கொதிக்கவிடவும்.கொதித்ததும் அரைத்த விழுதை சேர்த்து கைவிடாமல் பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

*பின் சர்க்கரை சேர்த்து கொதித்த  பின் இறக்கவும்.

பின் குறிப்பு:

*இதனை வெல்லம்/நாட்டு சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.இந்தளவு இனிப்பு சரியாக இருக்கும்,விரும்பினால் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

*விரும்பினால் வறுத்த முந்திரி,திராட்சை சேர்க்கலாம்.அது சேர்க்காமலே மிக நன்றாக இருந்தது.

*ஒரிஜினல் ரெசிபியில் கசகசாவுடன் ஊறவைத்த அரிசி சேர்த்து அரைப்பார்கள். அதற்க்கு பதில் நான் ஒட்ஸ் சேர்த்து செய்துள்ளேன்.

*அரிசிக்கு பதில் அரிசிமாவு/ ப்ரவுன் அரிசி/ ப்ரவுன் அரிசிமாவு சேர்த்து செய்யலாம்.

Related Videos