அடை ப்ரதமன் (பாயாசம்)
தேவையான பொருட்கள்:
அரிசி அடை - 1/2 கப்
ஏலக்காய்த்தூள்+சுக்குப்பொடி - தலா 1/4 டீஸ்பூன்
முதலாம் தேங்காய்ப்பால் - 1/4 கப்
இரண்டாம் தேங்காய்ப்பால் - 1/2 கப்
துருவிய வெல்லம் - 1/2 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரி+திராட்சை = தேவைக்கு
தேங்காய்ப்பல்- 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும்.
*கடாயில் நெய் விட்டு தேங்காய்ப்பல், முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.அதே கடாயில் அடையை லேசாக வறுக்கவும்
*வெல்ல நீர் மற்றும் 2ஆம் தேங்காய்ப்பால் சேர்த்து 20 நிமிடங்கள் வேகவிடவும். இடையிடையே கலக்கிவிடவும்.
*அடை வெந்து திக்கானதும் முதல் பால் சேர்த்து கொதிவரும் போது இறக்கி ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி மற்றும் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து பரிமாறவும்
*சுவையான அடை ப்ரதமன்/பாயாசம் ரெடி!!
*பாயாசம் ஆறியதும் கெட்டியாகிவிடும்,அதனால் கொஞ்சம் நீர்க்க இருக்கும் போதே இறக்கிவிடவும்