ராஜம் சுக்கு காபி பொடி

சுக்கு,தனியா,மஞ்சள்தூள்,வெந்தயம்,திப்பிலி,சித்தரத்தை,பனைவெல்லம்,மிளகு,அஸ்வகந்தா,நன்னாரி,அதிமதுரம்,ஜாதிக்காய் சேர்த்து செய்வார்கள்

சுக்கு காபியை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

*அதிகப்படியான பித்தம் குறையும்.

*உடலின் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

*ஜீரணத்தை தூண்டி ,பசியை அதிகரிக்கும்.

*மழைக்காலங்களில் ஏற்படும் சளி,காய்ச்சல் குணமாகும்.

தேவையான பொருட்கள்:

சுக்கு - 25 கிராம்

தனியா - 2 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் -1/4 டீஸ்பூன்

ஜாதிக்காய் -சிறியதுண்டு

கண்டதிப்பிலி - 2 குச்சிகள்

மிளகு - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்

பனை வெல்லம் அல்லது வெல்லம் -சுவைக்கேற்ப

செய்முறை விளக்கம்:

*கொடுத்துள்ள பொருட்களில் பனை வெல்லம் மற்றும் மஞ்சள்தூள் தவிர அனைத்தையும் வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.

*ஆறியதும் மிக் சியில் பொடிக்கவும்.பின் மஞ்சள்தூள் மற்றும் பனைவெல்லம் சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்

சுக்கு காபி செய்முறை:

* 1 கப் நீரில் 2 டீஸ்பூன் சுக்கு காபி பொடியை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகவும்.

பின் குறிப்பு:

*இது கொஞ்சம்  காரமாக இருக்கும்,அதனால் சுவைக்கேற்ப வெல்லத்தை சேர்க்கவும்.

*விரும்பினால் இதில் சிறிதளவு பால் கலந்து பருகலாம்,ஆனால் இதை ப்ளையினாக குடிப்பது தான்  நன்றாக இருக்கும்

Related Videos