கடலைப்பருப்பு பாயாசம் மிக்ஸ்
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு+முந்திரி - தலா 1/4 கப்
ஏலக்காய் -5
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*வெறும் கடாயில் கடலைப்பருப்பை போட்டு மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.
*அடுப்பை அணைத்துவிட்டு முந்திரியை சூடான கடாயில் போட்டு வைக்கவும்.வறுக்க வேண்டாம்.
*முதலில் கடலைப்பருப்பினை மிக்ஸியில் போட்டு நைசாக பொடிக்கவும்.
*பின் சர்க்கரை, ஏலக்காய் மற்றும் முந்திரி சேர்த்து நைசாக பொடிக்கவும்
பாயாசம் செய்யும் முறை:
*கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி 2 டேபிள்ஸ்பூன் மிக்ஸினை போட்டு வறுத்து சுண்ட காய்ச்சிய 1 1/2 கப் பாலினை ஊற்றி கைவிடாமல் கிளறி 5 நிமிடத்தில் இறக்கவும்.சுவையான பாயாசம் தயார்