எவரெஸ்ட் சிக்கன் தந்தூரி மசாலா
தேவையான பொருட்கள்:
அன்னாசிப்பூ -1
பிரியாணி இலை -2
கிராம்பு - 4
பட்டை -1
கறுப்பு ஏலக்காய் -2
ஜாதிக்காய் -சிறிய துண்டு
கசகசா -1 டீஸ்பூன்
மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
சுக்கு - 1 சிறிய துண்டு
கடுகு -1/4 டீஸ்பூன்
துவரம் பருப்பு -1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் -3
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -2 1/2 டேபிள்ஸ்பூன்
தனியாதூள் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு -1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*கொடுக்கபட்ட பொருட்களில் தூள் வகைகள் மற்றும் உப்பு தவிர மீதி அனைத்தையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து ஆறவைக்கவும்
*முதலில் வறுத்த பொருட்களில் பூண்டை தவிர மற்ற அனைத்தையும் பொடி செய்த பின் மற்ற தூள் வகைகள், உப்பு மற்றும் பூண்டுப்பல் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
பின் குறிப்பு:
*இதில் வரமிளகாய்த்தூள், தனியாத்தூள் பதிலாக காய்ந்த மிளகாய் மற்றும் தனியா வறுத்து சேர்த்து அரைக்கலாம்.
*இந்த மசாலாவை அனைத்து வகை தந்தூரி ரெசிபியில் சேர்க்கலாம்.
சிக்கன் தந்தூரி செய்யும் முறை:
*சிக்கன் தொடைபகுதியை அங்கங்கே கீறி எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் வைக்கவும்.
*பின் இஞ்சி பூண்டு விழுது+எவரெஸ்ட் தந்தூரி மசாலா + கெட்டி தயிர்+சிகப்பு கலர் சேர்த்து 4 மணிநேரம் ஊறவைத்து அவனில் பேக் செய்து எடுக்கவும்