பிஸிபேளாபாத் மசாலா பொடி
சாதரணமாக இந்த பொடியில் கொப்பரைத்துறுவல் சேர்த்து அரைப்பாங்க,ஆனால் இந்த செய்முறையில் சேர்க்க தேவையில்லை.சாதம் செய்யும் போது சேர்த்தால் போதுமானது.
அதனால் தேங்காய் சேர்க்காததால் இந்த பொடியை 3 மாதம்வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
இதே பொடியை உருளை மற்றும் கத்திரிக்காய் வறுவல் செய்தால் மிக அருமை.
மேலும் இதில் காஷ்மிரி மிளகாயை பயன்படுத்துவது நல்ல நிறைத்தை கொடுக்கும்.
வறுக்கும் போதும் கொடுத்துள்ள முறைப்படியே பொருட்களை சேர்த்து வதக்கவும்.
தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு- 1 1/2 டேபிள்ஸ்பூன்
தனியா- 1/4 கப்+1/8 கப்
காய்ந்த மிளகாய் -10
காஷ்மிரி மிளகாய்- 22
1 இஞ்ச் அளவு பட்டை- 6
கடுகு- 1/2 டீஸ்பூன்
கசகசா- 1/2 டேபிள்ஸ்பூன்
கிராம்பு -3
வெந்தயம்- 1/8 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -1டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, கிராம்பு, வெந்தயம், பட்டை, கா.மிளகாய் மற்றும் காஷ்மிரி மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுக்கவும்.
*கடைசியாக தனியா மற்றும் கசகசா சேர்த்து வதக்கவும்
*நன்கு ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.
*அரைத்த பொடியை சிறிது நேரம் ஆறவைத்து காற்றுபுகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தவும்