வாங்கிபாத் மசாலா பொடி
இதில் உருளை வறுவல் செய்ததில் மிக நன்றாக இருந்தது.காஷ்மிரி மிளகாயை பயன்படுத்துவது நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
இதில் கொப்பரைத்துறுவல் சேர்க்காததால் ப்ரிட்ஜில் 2 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
தனியா -1 1/2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு -3/4 டேபிள்ஸ்பூன்
வெ.உளுத்தம்பருப்பு -3/4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 2
காஷ்மிரி மிளகாய்- 4
கிராம்பு -5
பட்டை 1 இஞ்ச் அளவில்- 2
எண்ணெய் -1 1/2 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*கடாயில் எண்ணெய் ஊற்றி முதல் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
*பின் பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வறுத்த பின் மிளகாயினை சேர்த்து வறுக்கவும்.
*கடைசியாக தனியாவை சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை அணைக்கவும்.கடாயின் சூட்டிலேயே தனியா வறுபட்டுவிடும்
*ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.
*அரைத்த பொடியினை நன்கு ஆறவைத்த பின் காற்றுப்புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்