முப்பருப்பு வடை

தேவையான பொருட்கள்:

முழு வெள்ளை உளுந்து - 1 கப்

கடலைப்பருப்பு+துவரம்பருப்பு - தலா 1/2 கப்

பொடியாக அரிந்த வெங்காயம் - 1/2 கப்

பொடியாக அரிந்த கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிது

பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - சிறுதுண்டு

உப்பு-தேவைக்கு

எண்ணெய் - பொரிக்க

செய்முறை விளக்கம்:

*உளுந்தை தனியாகவும்,பருப்புகளை ஒன்றாகவும் 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிகட்டவும்.

*உளுந்தை ,உளுந்துவடைக்கு அரைப்பதைபோல அரைத்து அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு அரைக்கவும்.

*பருப்புகளை பெருஞ்சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*அனைத்தையும் உப்பு+வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கி வடைகளாக சுட்டெடுக்கவும்.

Related Videos