பகோடா வத்தல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு -1 கப்
நீர் -3 கப்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் -1/2 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -2
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1 டீஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி- 1 கைப்பிடி
எலுமிச்சை சாறு- 1 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*குக்கரில் 3 கப் நீரை நன்கு கொதிக்கவிடவும்.
*அரிசிமாவில் சிறிது நீர்விட்டு உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும்.
*நீர் கொதிக்கும் போது அரிசிமாவை ஊற்றி கைவிடாமல் கிளறவும்
*மாவு வெந்து கெட்டியாகி கையில் ஒட்டாமல் வரும் பதத்தில் எலுமிச்சைசாறு ஊற்றி கிளறி இறக்கவும்.
*இதில் மேற்கூறிய வெங்காயம் மற்றும் மற்ற பொருட்களை சேர்த்து கிளறவும்.
*ஆறியதும் துணியில் மாவினை எடுத்து கிள்ளி வைத்து வெயிலில் காயவைத்து எடுக்கவும்.
*மறுநாள் காலையில் துணியில் பின்புறத்தில் நீர் தெளித்து வற்றல்களை எடுத்து நன்கு காயும் வரை வெயிலில் வைத்து எடுக்கவும்.
*பொரிக்கும் போது எண்ணெய் நன்கு காயவைத்து பொரித்தெடுக்கவும்
பின் குறிப்பு:
*சின்ன வெங்காயம் மட்டுமே சேர்க்கவும்.பெரிய வெங்காயம் சேர்க்கும் போது சுவையில் வித்தியாசம் தெரியும்.
*அரிசிமாவுக்கு பதில் அரிசி ஊறவைத்து அரைத்தும் செய்யலாம்.