உப்பு (அட ) மாங்கா
இந்த மாங்காயின் கொட்டையை குழம்பு வைக்கலாம்.உடம்புக்கு மிக நல்லதும் கூட...
இதில் உப்பு அதிகம் இருப்பதால் குழம்பில் உப்பின் அளவை குறைத்து போடவும்.
வத்தல்களில் உப்பு தான் ப்ரிசர்வேடிவ் என்பதால் உப்பினை அதிகம் போடவும்.
தேவையான பொருட்கள்:
கிளி மூக்கு மாங்காய்- 5
கல் உப்பு - தேவைக்கு
மஞ்சள்தூள் -1 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*மாங்காயை கழுவி நன்கு துடைத்து பக்கவாட்டில் முக்கால் பாகம் வரை நறுக்கவும்.
*எப்படி என்று மேலிருக்கும் படத்தை பார்த்தால் புரியும் என நினைக்கிறேன்.
*கல் உப்பு,மஞ்சள்தூள் இரண்டையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
*உப்பு கலவையை நறுக்கிய மாங்காயில் நங்கு அடைத்து வைக்கவும்.இப்படியே அனைத்து மாங்காயில் செய்த பின் பீங்கான் ஜாடி அல்லது பானையில் வைத்து மெல்லிய துணியால் மூடி வைக்கவும்.
*இப்போழுது மறுநாள் மாங்காய் நங்கு ஊறி நீர் விட்டிருக்கும்.
*தனியாக மாங்காயினை மட்டும் தட்டில் வைத்து வெயிலில் காய்வைக்கவும்.மாங்காய் ஊறவைத்த பானையும் நீரோடு ,துணியால் மூடி வெயிலில் வைக்கவும்.
*மாலையில் திரும்ப மாங்காயினை பானையில் போட்டு எடுத்துவைக்கவும்.இதே போல் நீர் வற்றும் வரை செய்த பின் மாங்காய் வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும்.
*இதனை மீண்டும் நன்கு காயவைத்து எடுத்து பத்திரபடுத்தவும்.அதாவது மாங்காயை ஆட்டினால் உள்ளிருக்கும் கொட்டை சத்தம் கேட்க வேண்டும்.