விநாயகரின் துணைவிகள் பற்றிய கதை!!!
விநாயகர் சதுர்த்திக்கு நடைபெறும் 9 நாள் பூஜை கோலாகலமாக தொடங்கி விட்டது. ஒவ்வொரு தெருக்களும், கோவில்களும் விநாயகரின் பிறப்பை கொண்டாடி வருகிறது. இந்து புராணத்தில் யானை முகத்தினைக் கொண்ட விநாயக கடவுளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு விசேஷ இடமும் அளிக்கப்பட்டுள்ளது. விநாயகரின் பிறப்பு மற்றும் வீரத்தை குறிக்கும் கதைகள் பலவற்றை நாம் அறிவோம். அவரின் மணமான தகுநிலை பற்றி புராண கதைகளில் விவரிக்கப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் விநாயகர் ஒரு பிரம்மச்சாரி, அதாவது திருமணமாகாத கடவுளாக பார்க்கப்படுகிறார்.
ஆனால் அவரின் மணமான தகுநிலை பற்றியும், அவரின் துணைவிகளை பற்றியும் பல நம்பிக்கைகள் இருக்க தான் செய்கிறது. இரட்டை சகோதரிகளான ரித்தி மற்றும் சித்தியை அவர் மணமுடித்துள்ளார் என நம்பப்படுகிறது. விநாயகர் மற்றும் அவரின் மணமான தகுநிலை பற்றிய புராணங்களை பார்க்கையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல விதமான நம்பிக்கைகள் நிலவி வருகிறது. புத்தி (அறிவு), சித்தி (ஆன்மீக சக்தி) மற்றும் ரித்தி (வளமை) ஆகியோரை விநாயகர் மணந்துள்ளார் என பல பக்தர்கள் நம்பி வருகின்றனர். இன்னும் சில இடங்களிலோ சரஸ்வதி தேவியின் கணவராக விநாயகர் அறியப்படுகிறார். விநாயகரை பற்றியும், அவரின் மணமான தகுநிலை பற்றியும் இந்த வட்டார வேறுபாடுகள் உள்ளதால் பலவித குழப்பங்கள் நிலவுகிறது. சிவபுராணத்தில் விநாயகரின் திருமணம் விவரிக்கப்பட்டுள்ளது.
விநாயகரும், அவருடைய தம்பியுமான கந்தனும் பிரஜாபதியின் புதல்விகளான சித்தி மற்றும் புத்தியை மணக்க போட்டி போட்டுள்ளனர். தன் சாதூரியத்தால் இந்த சண்டையில் ஜெயித்த விநாயகர், அந்த இரட்டை சகோதிரிகளை தனக்கு மணம் முடித்து வைக்க தன் பெற்றோரான பரமசிவன் பார்வதியிடம் கோரிக்கை விடுத்தார். விநாயகருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது: சித்திக்கு பிறந்த ஷேமா மற்றும் புத்திக்கு பிறந்த லாபா. அஷ்டசித்தியுடனான விநாயகரின் உறவும் நன்கு அறியப்பட்டதே. யோகா மூலமாக அடையப்படும் 8 ஆன்மீக ஆற்றல்களே இந்த அஷ்டசித்தியாகும். விநாயகரை சுற்றியுள்ள எட்டு பெண்கள் தான் இந்த 8 ஆன்மீக சக்திகளை குறிக்கிறார்கள். சந்தோஷி மாதாவிற்கு தந்தையாகும் விநாயகரை சிலர் குறிப்பிடுகின்றனர். மேற்கு வங்காளத்தில் வாழை மரத்துடன் விநாயகரை சம்பந்தப்படுத்துகின்றனர். துர்கை பூஜையின் முதல் நாளன்று, சிவப்பு நிற பார்டர் கொண்ட வெள்ளை நிற சேலையை வாழை மரத்தில் சுற்றி, அதன் இலைகளின் மீது குங்குமம் தெளிக்கப்படும். 'காலா பௌ' என அழைக்கப்படும் இந்த மரத்தை வணங்கிய பிறகு அதனை விநாயகரின் வலது பக்கம் வைப்பார்கள்.
இந்த காலா பௌவை விநாயகரின் மனைவியாக பல வங்காள மக்கள் கருதுகின்றனர். ரித்தி மற்றும் சித்தி என இரண்டு பேர்களுடன் விநாயகர் சம்பந்தப்படுத்தப்பட்டிருந்தாலும், அவரை கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரியாக பல பக்தர்கள் கருதுவதால், அந்த பெண்களுடனான அவரின் உறவு முறை தெளிவற்று உள்ளது. இந்த ஜோடிக்கு புராண சான்று எதுவும் இல்லை; ஆனால் சிவபுராணத்தில் புத்தி மற்றும் சித்தி பற்றியும். மத்ஸ்ய புராணாவில் ரித்தி மற்றும் புத்தி பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து மதத்தில், விநாயகரை அவருடைய துணைவியான ரித்தி மற்றும் சித்தியுடன் சேர்ந்து தான் வணங்குகின்றனர். இது விநாயகர் சதுர்த்தி என்பதால் ரித்தி மற்றும் சித்தியையும் சேர்த்து வணங்கி அவர்களின் அருளை பெற்றிடுங்கள். l