சுண்டைக்காய் வத்தல்
சுண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது,ஏராளமான பயன்கள் கொண்டது
இருமலுக்கு - 2 டீஸ்பூன் சுண்டைக்காய் வத்தலை நெய்யில் வறுத்து பொடித்து,தினமும் 2 வேளை 1/2 டீஸ்பூன் சாப்பிடலாம்..
தலைவலிக்கு - சுண்டைக்காய் வத்தலை பொடித்து தினமும் இதனை முகர்ந்தால் சரியாகும்.
வயிற்றுவலிக்கு - 5-6 சுண்டைக்காய் வத்தலை நெய்யில் பொரித்து சாப்பிட்டால் சரியாகும்.
இரத்தசோகைக்கு -2 டீஸ்பூன் சுண்டைக்காய் வத்தலை நெய்யில் வறுத்து பொடித்து,தினமும் 3 வேளை 1/4 டீஸ்பூன் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
ப்ச்சை சுண்டைக்காய் -3 கப்
தயிர் - 2கப்
உப்பு -தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*பச்சை சுண்டைக்காயின் காம்பினை நீக்கி கழுவவும்
*இதனை இடிப்பானில் லேசாக நசிக்கியோ அல்லது கத்தியில் கீறியோ வைக்கவும்.
*தயிரை கட்டியில்லாமல் நன்கு கடைந்து உப்பு சேர்த்து 1/2 கப் நீர் ஊற்றி சுண்டைக்காயை 1 நாள் ஊறவிடவும்.
*மறுநாள் வெயிலில் சுண்டைக்காயினை மட்டும் தட்டில் வைத்து காயவைக்கவும்.
*மோரினை வெயிலில் வைக்ககூடாது,மாலையில் திரும்பவும் மோரில் ஊறவைக்கவும்.
*இதேபோல் மோர் வற்றும் வரை செய்து பின் வெயிலி நன்கு காயவைத்து எடுத்து வைக்கவும்.
*வத்தகுழம்பு செய்தால் நன்றாக இருக்கும்.குறிப்பினை இங்கே பார்க்கவும்.
*இதே போல் மணத்தக்காளி காயில் செய்யலாம்,அப்படி செய்யும் போது நேரடியாகவே தயிரில் ஊறவைத்து காயவைக்கவும்.நசுக்கி போட தேவையில்லை.
*தயிரில் ஊறவைத்து போடுவது வாசனையாக இருக்கும்