நெய் காய்ச்சுவது எப்படி??
தேவையான பொருட்கள்:
உப்பில்லாத வெண்ணெய் - 250 கிராம்
கறிவேப்பிலை - 2 இனுக்கு
காய்ந்த மிளகாய்- 1
கல் உப்பு - 5
செய்முறை விளக்கம்:
*வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் போட்டு உருக்கவும்
*உருகியதும் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது கல் உப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்
*பின் நுரைபோல் வரும் அதை கரண்டியால் மேலோடு எடுத்து கீழே ஊற்றி விடவும்
*பின் நன்றாக தெளிந்து வாசனை வரும் போது இறக்கி ஆறவைத்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தவும்.
*இந்த முறையில் காய்ச்சும் பொது வீடே மணமாக இருக்கும்