புளி பேஸ்ட் செய்வதெப்படி??
தேவையான பொருட்கள்:
புளி - 500 கிராம்
மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 6 கப்
செய்முறை விளக்கம்:
*புளியை 6கப் நீர் சேர்த்து குக்கரில் 5 விசில் வரை வைக்கவும்
*ஆறியதும் நன்கு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
*பின் கடாயில் கரைத்த புளி, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவைத்து ஆறியதும் பாட்டிலில் ஊற்றி ப்ரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்தவும்.
பின் குறிப்பு:
*எடுக்கும்போது ஈரமில்லாத கரண்டியால் எடுக்கவும்.
*1 டேபிள்ஸ்பூன் புளிபேஸ்ட்க்கு தேவையானளவு நீர் சேர்த்து கரைத்து பயன்படுத்தவும்.