வெல்ல சீடை
தேவையான பொருட்கள்
பதப்படுத்திய பச்சரிசி மாவு - 1 கப்
வறுத்த உளுத்த மாவு - 1 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 1/2 கப்
துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 2
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்க்கு
செய்முறை விளக்கம்:
*அரிசி மாவு,உளுத்த் மாவு,நசுக்கிய ஏலக்காய்,தேங்காய்,உருக்கிய நெய் எல்லாவற்றையும் கலந்துக்கொள்ளவும்.
*வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு காய்ச்சிக்கொள்ளவும் (அதில் மண் இருக்கும்).
*வெல்லத்தை வடிக்கட்டி கலந்த மாவில் ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி துணியில் 5 நிமிஷம் உலர்த்தவும்.
*எண்ணெய் காயவைத்து (ரொம்ப புகை வரும்வரை காயக்கூடாது) உருண்டைகளைப்போட்டு பொரித்தெடுக்கவும்.
*இந்த முறையில் பொரித்தால் சீடை வெடிக்காது.
மாவு பதப்படுத்தும் முறை:
பச்சரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து,கழுவி,தண்ணீரை வடிக்கட்டி துணியில் (நிழலில்) உலர்த்தவும்.உலர்ந்தபின் மிக்ஸியில் மாவாக அரைத்து சலிக்கவும்.சலித்த மாவை கடாயில் வாசம் வரும்வரை வறுக்கவும்.வறுத்த மாவை மீண்டும் சலித்து ஆற வைத்து காற்று புகாதவாறு எடுத்து வைக்கவும்.தேவையான போது உபயோகிக்கலாம்.